JIO vs Airtel: 5 G நெட்வொர்க்கில் எது பெஸ்ட்?

5ஜி சேவை விரைவாக இந்தியாவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் எந்த நிறுவனத்தின் சேவை பெஸ்டாக இருக்கும் என தெரிந்து கொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:10 PM IST
JIO vs Airtel: 5 G நெட்வொர்க்கில் எது பெஸ்ட்? title=

டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை 5ஜி சோதனையை முடித்துள்ளன. நாடு முழுவதும் விரைவில் இந்த நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்க உள்ளன. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் 5ஜி சோதனையில் சரிசமமான 5ஜி வேகத்தை கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இரண்டும் சிறிய அளவிலான தொழில்நுட்ப வித்தியாசத்தில் இந்த சேவையை வழங்க இருக்கின்றன. இதனால், அவற்றில் எது சிறந்தது என்பதை அறிந்து கொள்வோம்?

ALSO READ | 5G என்றால் என்ன, Speed எவ்வளவு வேகம்? சிறப்பு பற்றி இங்கே அறிக!

5ஜி என்றால் என்ன?

4ஜி நெட்வொர்க்கின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக பார்க்கப்படும் 5 ஜி, அடுத்த இணைய பாய்ச்சலை ஏற்படுத்தபோகும் டெக்னாலஜியாகும். 4 ஜியை விட 100 மடங்கு இணைய பதவிறக்கத்தை கொடுக்க இருக்கும் 5ஜி லோ, மிட், ஹை என 3 வகையான பிராண்ட்பேண்டுகளில் வெளியாக உள்ளது. பிராட்பேண்டுகளின் நிலைக்கு ஏற்ப வேகத்தை கொடுக்கும். வையர்லெஸ் நெட்வொர்க்குகளின் வேகம் முன்பை விட அதிகமாக இருக்கும். அதாவது, 2-8 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் 4 ஜி இயங்கிய நிலையில், 5ஜி 30-300 கிகா ஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் இயங்கும். 

ஏர்டெல் VS Jio எது பெஸ்ட்?

ஸ்டாண்ட் அலோன் மற்றும் ஸ்டாண்ட் அலோன் இல்லாதவை என இரண்டு வகையான அமைப்பில் ஏர்டெல் மற்றும் ஜியோ 5 ஜி சேவையை வழங்க இருக்கின்றன. ஆனால், இரண்டுமே வாடிக்கையாளர்களுக்கு போதுமான வேகத்தில் நெட்வொர்க் இணைப்பை வழங்கக்கூடியவையாக இருக்கும். அதேநேரத்தில் ஸ்டாண்ட் அலோன் சிஸ்டத்தில் இருக்கும் நெட்வொர்க் லைவ், வையர்லெஸ் கான்டாக்டுக்கு முக்கியம் என்பதால், ஸ்டாண்ட் அலோன் சேவையில் இயங்கக்கூடிய ஜியோவை தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே 4ஜிக்காக ஏர்டெல் அதிகம் செலவழித்திருப்பதால், முதலில் ஸ்டாண்ட் நெட்வொர்க்கில் சேவையை தொடங்கி, பின்னர் ஜியோவைப் போல ஸ்டாண்ட் அலோன் டெக்னாலஜியை பயன்படுத்த ஏர்டெல் திட்டமிட்டுள்ளது. ஆனால் இரண்டுமே 5 ஜியில் சிறந்தவையாக இருக்கும். 

ALSO READ | ப்ரீபெய்டு திட்டங்களின் காலத்தை 30 நாட்களாக உயர்த்த வேண்டும் -  டிராய் அதிரடி உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News