Flipkart Big Billion Days Sale: நம்ப முடியாத சலுகை, அசத்தல் தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ்
இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் ஆண்டு விழா விற்பனையை அறிவித்துள்ளன.
Flipkart Big Billion Days sale 2021: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முக்கிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் ஆண்டு விழா விற்பனையை அறிவித்துள்ளன. சமீபத்தில் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2021-க்கான (Big Billion Days sale 2021) தேதிகளை அறிவித்துள்ளது.
பிக் பில்லியன் டேஸ் (BBD) சேல் 2021-ல் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஏராளமான பொருட்கள் இருக்கும் என பிளிப்கார்ட் (Flipkart) தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், தொலைக்காட்சி பெட்டிகள், சலவை இயந்திரங்கள் என பட்டியல் நீளமாக உள்ளது. அனைத்து வகைகளிலும் பெரிய அலவிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வாடிக்கையளர்கள் எதிர்பார்க்கலாம்.
ALSO READ: Amazon Great Indian Festival sale அதிரடி தள்ளுபடி, அசத்தும் சலுகைகள்: விவரம் உள்ளே
இந்த சேலின் போது, ஆறு ஸ்மார்ட்போன் (Smartphones) பிராண்டுகள் புதிய சாதனங்களை வெளியிடும் என்பதை ஈ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் உறுதிப்படுத்தியது. இந்த பிராண்டுகள் மோட்டோரோலா, ஒப்போ, போகோ, ரியல்மி, சாம்சங் மற்றும் விவோ ஆகியவை ஆகும்.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2021 டீசரின் படி, போட் பிராண்டின் பொருட்கள் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடியிலும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 70 சதவீத தள்ளுபடியும் கிடைக்கும். டிசோ போன்ற பல்வேறு பிராண்டுகள் 60 சதவிகிதம் தள்ளுபடியில் கிடைக்கும். இன்டெல் லேப்டாப்புகள் (Intel Laptops) 40 சதவீதம் வரை தள்ளுபடியில் கிடைக்கும்.
சாம்சங் ஸ்மார்ட்போன்கள், ஒப்போ சாதனங்கள், விவோ ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன் 12 சீரிஸ் (iPhone 12 Series), ஐபோன் எக்ஸ்ஆர், மலிவு விலை ஐபோன் எஸ்இ 2020 மற்றும் பல பொருட்களிலும் ஃப்ளிப்கார்ட் பல பெரிய தள்ளுபடிகளை வழங்கும். இந்த ஸ்மார்ட்போன்களில் குறிப்பிட்ட டீல்கள் பற்றிய விவரங்களை ஃப்ளிப்கார்ட் இன்னும் வெளிப்படுத்தவில்லை.
ALSO READ: Flipkart Big Billion Days Sale அறிவிப்பு; செம்ம தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR