புதுடெல்லி: இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அதன் மிக பிரபலமான ‘தி பிக் பில்லியன் டேஸ்’ (The Big Billion Days-TBBD’ பண்டிகைகால விற்பனைக்கு மீண்டும் தயாராக உள்ளது. TBBD விற்பனையின் ஒன்பதாவது பதிப்பு செப்டம்பர் 23 அன்று தொடங்கி செப்டம்பர் 30 வரை இயங்கும். பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான அணுகல் முன்கூட்டியே கிடைக்கும். இந்த விற்பனையில், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy S22+, Galaxy S23 5G, Galaxy S21 FE 5G போன்ற பல சாம்சங் காலக்சி ஃபோன்கள் நம்பமுடியாத தள்ளுபடியில் ஆன்லைன் போர்ட்டலில் கிடைக்கும். பல வித தள்ளுபடிகள் தவிர, டீல்களில் வங்கி கார்டுகளுக்கான சலுகைகள், ப்ரீ ஆர்டர் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் ஆகியவையும் உள்ளன. 


பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சாம்சங் போன்களில் வழங்கப்படும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் இதோ:


Samsung Galaxy F23 5G: தள்ளுபடிக்குப் பிறகு, ரூ 10,999 என்ற விலையில் கிடைக்கும்


Samsung Galaxy F13: ரூ.8,499-க்கு கிடைக்கிறது


Samsung Galaxy S22+: ரூ.59,999-க்கு கிடைக்கிறது


Samsung Galaxy S21 FE 5G: ரூ 31,999 இல் கிடைக்கிறது


பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலின் போது, ​​வாடிக்கையாளர்கள் பல்வேறு வகைகளில் உள்ள பொருட்களை ப்ரீ புக் செய்ய முடியும். இதற்கு டோக்கன் அட்வான்சாக ரூ.1 அளிக்க வேண்டும். 


பல்வேறு வகைகளில் உள்ள சுமார் 90 பிராண்டுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் 130 ‘ஸ்பெஷல் எடிஷன்’ கலெக்டபிள்சையும் அணுக முடியும். 10,000 க்கும் மேற்பட்ட புதிய புராடெக்டுகளை இந்த சேலில் வாடிக்கையாளர்கள் வாங்கி மகிழலாம். 


வங்கி அட்டைகளில் கிடைக்கும் தள்ளுபடிகள், UPI மற்றும் எளிதான EMI- கள் மூலம் வாடிக்கையாளர்கள் மலிவு விலையில் ஷாப்பிங் அனுபவத்தைப் பெறுவார்கள்.


பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் இன்னும் எந்த பொருட்களை எல்லாம் மலிவு விலையில், தள்ளுபடிகளுடன் வாங்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | Flipkart Sale: டாப் பிராண்ட் போன்களுக்கு பம்பர் தள்ளுபடி, அசத்தல் சலுகை 


iPhone 13 விலையில் தள்ளுபடி கிடைக்கக்கூடும்


இந்த விற்பனைக்காக மக்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக தள்ளுபடியை பெறக்கூடும். பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள டீசரின் படி, இந்த சேலில் ஐபோன் 13 இன் விலை ரூ.69,990ல் இருந்து ரூ.49,990 ஆக குறைக்கப்படலாம். சமீபத்தில் ஐபோன் 14 வெளியிடப்பட்டது. எனவே ஐபோன் 13 இன் விலை குறையும் என்று பலர் காத்திருந்தனர். 128ஜிபி சேமிப்பு மாறுபாடு தற்போது பிளிப்கார்டில் ரூ.69900க்கு கிடைக்கிறது.


இவற்றில் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கும்


இந்த விற்பனையில் பிளிப்கார்ட் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்சஸரீஸ்களுக்கும் 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிவி அல்லது புதிய வாஷிங் மெஷின் வாங்கும் எண்ணம் இருந்தால், அவற்றிலும் பம்பர் தள்ளுபடிகள் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


இந்த விற்பனையில் ஏசியில் 55 சதவீதம் வரை தள்ளுபடியும், குளிர்சாதன பெட்டியில் 60 சதவீதம் வரை தள்ளுபடியும், பொம்மைகள், விளையாட்டு மற்றும் அழகு சாதன பொருட்களுக்கு 60 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கும். வீடு மற்றும் சமையலறை பொருட்களுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம்.


மேலும் படிக்க | Flipkart Big Billion Days: கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. ஆஃபரில் எலக்டிரானிக்ஸ் பொருட்களை அள்ளலாம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ