Flipkart Offer: ரூ.700 விற்பனையாகும் மிகச்சிறந்த 50 MP கேமரா ஸ்மார்ட்போன்

POCO M5: POCO நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனை நீங்கள் Flipkart-ல் வெறும் 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 14, 2022, 08:03 AM IST
  • போகோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
  • புதிய போனுக்கு பிளிப்கார்ட்டில் சலுகை
  • ரூ.700 குறைவாக வாங்கலாம்
Flipkart Offer: ரூ.700 விற்பனையாகும் மிகச்சிறந்த 50 MP கேமரா ஸ்மார்ட்போன் title=

POCO Latest Smartphone; இப்போது நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க எண்ணியிருந்தால் 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் தரமான ஸ்மார்ட்போனை வாங்குவது குறித்து யோசிப்பது நல்லது. ஸ்மார்ட்போன் நிறுவனமானPOCO, POCO M5 என்ற புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த விலையில் பல அற்புதமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. செப்டம்பர் 13, 2022 முதல், இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கிடைக்கிறது. அறிமுகத்தையொட்டி பல சலுகைகள் கிடைப்பதால், அந்த அனைத்து சலுகைகளும் உங்களுக்கு பொருந்தும்பட்சத்தில் அந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் 700 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 

POCO M5 விற்பனை தள்ளுபடி 

POCO M5 இரண்டு சேமிப்பக வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகத்துடன் கூடிய வேரியண்டுகள் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.12,499. இந்த போனை 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ரோம் கொண்டு எடுக்கலாம். ஆக்சிஸ் வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் இந்த போனுக்கு பணம் செலுத்தினால், உடனடியாக ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.10,999 ஆக குறைந்துவிடும்.

மேலும் படிக்க | ரூ.200 விலைக்குள் தினமும் 2ஜிபி டேட்டா, பிஎஸ்என்எல் பெஸ்ட் பிளான்

POCO M5; ரூ.649 ரூபாய்க்கு வாங்கவும்

POCO M5 ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. பழைய போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.11,850 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், இந்த போனின் விலை உங்களுக்கு ரூ.649 ஆக இருக்கும். இதன் மூலம் சுமார் 13 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போனை 700 ரூபாய்க்கும் குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

POCO M5-ன் அம்சங்கள்

POCO M5 செயலியைப் பொறுத்தவரை,  Mediatek Helio G99-ல் இயங்குகிறது. இதன் கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட கேமரா இருக்கும். 8MP செல்பி கேமராவும் போகோ எம்5-ல் வருகிறது. 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை சேமிப்பகத்துடன், இந்த ஃபோன் 6.58 இன்ச் முழு HD + டிஸ்ப்ளே, விரைவான சார்ஜிங் ஆதரவு, டூயல் சிம் வசதி மற்றும் ஆடியோ ஜாக் உடன் 5000mAh பேட்டரியையும் கொண்டிருக்கிறது. இது 4G ஸ்மார்ட்போன். 

மேலும் படிக்க | டாடா-வின் புதிய எலக்டிரிக் கார்; சிங்கிள் சார்ஜரில் 250 கி.மீ செல்லலாம்; குறைவான விலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News