Flipkart Big Saving Days விற்பனை ஜூலை 23, 2022 முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளமான Flipkart தளத்தில் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஆடைகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் வரை பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதில்  ஸ்மார்ட் டிவிகளுக்குக் சிறந்த ஆபர் கிடைக்கிறது. இந்த ஆபரின் கீழ் நோக்கியாவின் ஸ்மார்ட் டிவியை ரூ.700க்கும் குறைவான விலையில் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Flipkart-ல் மலிவான விலையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி


Nokia HD Ready LED Smart Android TV: 81 செமீ (32 இன்ச்) டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட் டிவி பிளிப்கார்ட்டில் ரூ.24,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது, ஆனால் ஆபரில் கீழ் 44% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.13,999க்கு விற்கப்படுகிறது. வங்கிச் சலுகையின் கீழ், சில வங்கிகளின் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ.1,300 வரை சேமிக்கலாம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு ரூ.6,000க்கு ஷாப்பிங் செய்வதன் மூலம் ரூ.1,000 தள்ளுபடி பெறலாம். இந்த இரண்டு சலுகைகளுக்கும் பிறகு, இந்த டிவியின் விலை உங்களுக்கு ரூ.11,699 ஆக இருக்கும்.


மேலும் படிக்க | Tech Tips: விரிசல் அடைந்த மொபைல் திரையை வீட்டிலேயே சரி செய்யலாமா... உண்மை என்ன


எக்ஸ்சேஞ்ச் ஆபர் மூலம் 700 ரூபாய்க்கு வாங்கலாம்


Nokia HD Ready LED Smart Android TVயை ரூ.2,500க்கு குறைவாக வாங்க விரும்பினால், அதற்கு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் பழைய டிவிக்கு பதிலாக இதை வாங்குவதன் மூலம், நீங்கள் ரூ.11 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம், மேலும் இந்த சலுகையின் முழு பலனை நீங்கள் பெற்றால், உங்களுக்கான டிவியின் விலை ரூ.11,699 இல் இருந்து ரூ.699 ஆக குறைந்து விடும்.


நோக்கியா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியின் அம்சங்கள்


நோக்கியா எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியில் 32 இன்ச் டிஸ்ப்ளே 1366 x 768 பிக்சல்கள் கொண்ட எச்டி ரெடி ரெசல்யூஷன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட் டிவி கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் உள்ளமைக்கப்பட்ட Chromecast உடன் வருகிறது. இதில் நீங்கள் 60Hz புதுப்பிப்பு வீதத்தையும் 39W ஒலி வெளியீட்டையும் பெறுகிறீர்கள். இந்த ஸ்மார்ட் டிவியில், நீங்கள் Netflix, Amazon Prime Video, YouTube மற்றும் Disney + Hotstar போன்ற தளங்களையும் அணுகலாம்.


மேலும் படிக்க | Jio Fiber திட்டம்: Netflix, Amazon Prime என அனைத்தும் இலவசம், இன்னும் பல நன்மைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ