பிளிப்கார்ட் சேல் ரெட்மி நோட் 10எஸ் ரூ. 99 ஆஃபர்: அதிகச் செலவு இல்லாமல், ஒரு நல்ல பிராண்டின் ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்ய நீங்கள் விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் பல கவர்ச்சிகரமான சலுகைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த விற்பனையின் மூலம், ரெட்மியின் அற்புதமான அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போனான ரெட்மி நோட் 10எஸ்-ஐ ரூ.12,999க்கு பதிலாக வெறும் ரூ.99க்கு வாங்கலாம். இந்த டீலை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெட்மி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கலாம்


ரெட்மி நோட் 10எஸ்-இன் விலை சந்தையில் ரூ.12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், சிறப்பு சலுகையின் கீழ், 5% அதாவது ரூ.650 கேஷ்பேக் கிடைக்கும். இது போனின் விலையை மேலும் குறைக்கும். போனின் விலை ரூ.12,349 ஆக குறையும்.


மேலும் படிக்க | ரிலையன்ஸ் டிஜிட்டல் மெகா ஆப்பர்: ஹெச்பி ஸ்மார்ட் சிம் லேப்டாப் உடன் 100GB இலவச டேட்டா 


ரெட்மி போனை இந்த வழியில் வெறும் ரூ.99-ல் வாங்கலாம்


99 ரூபாய்க்கு இந்த ஸ்மார்ட்போனை வாங்க வேண்டுமானால், அதற்கு உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்ற சலுகையில், அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் விற்க வேண்டும். பிளிப்கார்ட் இந்த டீலில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்குகிறது. இதில் உங்கள் பழைய ஸ்மார்ட்போனிற்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.12,250 வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கான இந்த போனின் விலை ரூ.12,349லிருந்து வெறும் ரூ.99 ஆகக் குறையும்.


ரெட்மி நோட் 10எஸ்-இன் அம்சங்கள்


ரெட்மியின் இந்த 4ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 செயலியில் வேலை செய்கிறது. மேலும் 4GB RAM உடன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இதில் கிடைக்கும். 6.43-இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் இந்த ஸ்மார்ட்போன் MP முதன்மை சென்சார், 8MP இரண்டாவது மற்றும் 2-2MP மூன்றாவது மற்றும் நான்காவது சென்சார்களை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில், செல்பி எடுப்பதற்கும் வீடியோ கால் செய்வதற்கும் 13 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.


மேலும் படிக்க | Infinix Note 12 5G: பிளிப்கார்ட்டில் ரூ.499-க்கு விற்பனை
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ