பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி: 43 இஞ்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.5,000-க்கு விற்பனை
Flipkart Big Saving Days: 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் டிவியை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில், பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் (Flipkart Big Saving Days) தொடங்கியுள்ளது. இந்த விற்பனை இன்று முதல் மே 3 ஆம் தேதி தொடங்கி மே 8 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த 6 நாள் நீண்ட விற்பனையில், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி-கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். குறிப்பாக, இந்த விற்பனையில் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன.
நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனை அதற்கான சரியான வாய்ப்பாக இருக்கும். இந்த விற்பனையில் Blaupunkt இன் ஸ்மார்ட் டிவிகளை மிக மலிவாக வாங்கலாம். 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த டிவியை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. டிவி-ஐ இவ்வளவு மலிவு விலையில் எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.
பிளிக்பார்ட் பிக் சேவிங் டேஸ்: Blaupunkt சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி, சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
Blaupunkt சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவியின் தொடக்க விலை ரூ.29,999 ஆகும். எனினும், இந்த பிளிக்பார்ட் விற்பனையில் இந்த டிவி விற்பனையில் ரூ.17,499க்கு கிடைக்கிறது. டிவியில் ரூ.12,500 முழுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதைத் தவிர இதில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன. இதன் காரணமாக டிவியின் விலை கணிசமாகக் குறையும்.
மேலும் படிக்க | வெறும் ரூ1949க்கு இந்த போக்கோ போனை வாங்க அரிய வாய்ப்பு
பிளிக்பார்ட் பிக் சேவிங் டேஸ்: Blaupunkt சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி வங்கி சலுகைகள்
Blaupunkt சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி-யை வாங்க, எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடித் தள்ளுபடியாக ரூ.1,250 கிடைக்கும். இதன் பிறகு டிவியின் விலை ரூ.16,249 ஆக குறையும். இவற்றைத் தவிர இதில் ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.
பிளிக்பார்ட் பிக் சேவிங் டேஸ்: Blaupunkt சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
Blaupunkt சைபர்சவுண்ட் 42 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை அதாவது பரிமாற்ற சலுகை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடி கிடைக்கும். எனினும், இதற்கு வாடிக்கையாளர்களின் பழைய டிவியின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.
இந்த விற்பனையில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பெற முடிந்தால், வெறும் ரூ.5,249-ல் இந்த ஸ்மார்ட் டிவி-ஐ வாங்கலாம்.
மேலும் படிக்க | ரியல் மீ ஸ்மார்ட்போனை ரூ.266-க்கு வாங்க அருமையான வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR