நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் வீடியோ பார்ப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் மேம்படுத்தபட்ட புதிய அம்சத்தால் நண்பர்களுடன் சேர்ந்து வீடியோக்களை பார்க்கலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 27, 2022, 02:55 PM IST
  • இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய அம்சம்
  • நண்பர்களுடன் சேர்ந்து வீடியோ பார்க்கலாம்
  • புதிய அம்சத்தை பயன்படுத்துவதை தெரிந்து கொள்ளுங்கள்
நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் வீடியோ பார்ப்பது எப்படி? title=

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  லேட்டஸ்டாக இந்த மெசேஜிங் தளத்தில் வாட்ச் டுகெதர் என்ற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்கள் நண்பர்களுடன் வீடியோ அழைப்பில் ஐஜிடிவி வீடியோக்கள், ரீல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களுடன் பேசும்போது வீடியோக்களைப் பார்க்கலாம். இந்த அம்சம் குழு அழைப்புகளிலும் செயல்படுகிறது.

மேலும் படிக்க | ’மறைந்துபோகும் செய்திகளை சேமிக்கலாம்’ வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அப்டேட்

இதுவரை உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் வாட்ச் டுகெதர் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாமல் இருந்தால், இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

1. உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் Instagram பயன்பாட்டைத் ஓபன் செய்யுங்கள்

2. திரையின் மேல் வலது மூலையில் உள்ள Messenger -ஐகானைத் கிளிக் செய்யவும்

3. அழைப்புகள் பகுதிக்குச் சென்று, நீங்கள் வீடியோக்களைப் பார்க்க விரும்பும் உங்கள் நண்பர்களுடன் வீடியோ அழைப்பை மேற்கொள்ளவும்.

4. வீடியோ அழைப்பு தொடங்கியவுடன், திரையின் அடிப்பகுதியில் உள்ள மீடியா பட்டனை கிளிக் செய்யுங்கள் 

5. நீங்கள் ஒன்றாகப் பார்க்க விரும்பும் கன்டென்டை இப்போது கிளிக் செய்யுங்கள். 

6. இதில் நீங்கள் விரும்பிய பதிவுகள், நீங்கள் சேமித்த பதிவுகள், Facebook வாட்ச், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உள்ளிட்டவைகளில் இருந்து வீடியோவைப் பார்க்கலாம்.

7. நீங்கள் விரும்பும் கன்டென்டை கிளிக் செய்தால், குழு அழைப்பில் உள்ள அனைவரும் வீடியோவை பார்க்கலாம்.

இதேபோல், புதிய அப்டேட் ஒன்றை இன்ஸ்டாகிராம் அண்மையில் கொண்டு வந்தது. நீங்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை தீவிரமாக பயன்படுத்தி வரும்போது, அப்போது வாட்ஸ்அப்பில் சாட் செய்ய விரும்பினால், நீங்கள் தாராளமாக செய்யலாம். இன்பாக்ஸூக்கு சென்று அல்லது வாட்ஸ்ப் அப் சாட்களுக்கு சென்று நேரடியாக பதில் அளிக்க வேண்டிய தேவை இருக்காது. இன்ஸ்டாகிராமில் இருந்தவாறே அந்த சாட்களில் பங்கேற்க இயலும். மேலும், இன்ஸ்டாகிராம் டிம்மிலும் பதிலளிக்கலாம். 

மேலும் படிக்க | Kawasaki Versys 650 ஏப்ரல் 30 வரை மட்டுமே1,50,000 ரூபாய் தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News