ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகிய இரண்டு முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் தளங்களின் விற்பனையும் ஒரே நேரத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு விற்பனைகளிலும், குறைந்த விலைகள் மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் நீங்கள் விரும்பும் தயாரிப்புகளை வாங்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பதிவில் இந்த தள்ளுபடிகளில் iPhone 14-க்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி காணலாம். ஆப்பிளின் சமீபத்திய ஸ்மார்ட்போன் சீரிஸின் இந்த மாடலை அமேசான் சேல் அல்லது ஃப்ளிப்கார்ட் விற்பனையில் சிறந்த தள்ளுபடியில் வாங்கலாம். இதை பற்றி இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசானிலிருந்து iPhone 14 வாங்கினால் இந்த தள்ளுபடி கிடைக்கும்


iPhone 14 (128GB) அமேசானில் அறிமுக விலையான ரூ.79,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கும்போது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தினால், உடனடியாக ரூ.1,250 தள்ளுபடி கிடைக்கும். பழைய போனுக்குப் பதிலாக இந்த போனை வாங்கி பரிமாற்ற சலுகையை பயன்படுத்திக்கொண்டால், வாடிக்கையாளர்கள் ரூ.15,200 வரை சேமிக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனும் கிடைத்தால், ஐபோன் 14-ன் விலை உங்களுக்கு ரூ.63,450 ஆக குறந்துவிடும். 


மேலும் படிக்க | Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன்களில் சரமாரி சலுகைகள், நம்ப முடியாத தள்ளுபடிகள்


ஐபோன் 14 இல் பிளிப்கார்ட் அமேசானை விட சிறந்த சலுகைகளை வழங்குகிறது


பிளிப்கார்டிலிருந்து ஐபோன் 14-ஐ வாங்கினால், அமேசானில் கிடைப்பதை விட அதிக சலுகைகளை பெறலாம். அமேசானைப் போலவே, பிளிப்கார்டிலும் ஐபோன் 14 ரூ. 79,900 என்ற விலையில் விற்கப்படுகிறது. எனினும், அமேசானை விட வங்கி சலுகைகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளின் மதிப்பு இங்கு சிறப்பாக உள்ளது. 


பிளிப்கார்டிலிருந்து ஐபோன் 14-ஐ வாங்கும்போது ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் உடனடி தள்ளுபடி வழங்கப்படும். மேலும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனையும் வாடிக்கையாலர்கள் பெற்றால், மொத்தமாக ரூ.19,900 சேமிக்க முடியும். இந்த வழியில், வாடிக்கையாளர்கள் பிளிப்கார்டில் ஐபோன் 14 ஐ 58,500 ரூபாய்க்கு வாங்க முடியும்.


ஐபோன் 14: அம்சங்கள்


ஐபோன் 14 இன் அடிப்படை சேமிப்பக மாறுபாடு அதாவது 128 ஜிபி மாறுபாடு பற்றி இங்கு காணலாம். A15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போனில், 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளே மற்றும் 5G நெட்வொர்க்கிற்கான ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த ஃபோன் 12-12MP இரட்டை கேமரா அமைப்பு மற்றும் 12MP முன் கேமராவை கொண்டுள்ளது. ஐபோன் 14 இல் ஆடியோ ஜாக் இல்லை மற்றும் விரைவான சார்ஜிங் (ஃபாஸ்ட் சார்சிங்) வசதியும் வழங்கப்படவில்லை. சார்ஜ் செய்ய, இந்த ஃபோன் USB Type-C போர்ட் மற்றும் லைட்னிங் கேபிளுடன் வருகிறது.


மேலும் படிக்க | வெறும் ரூ.13,000க்கு 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ