வெறும் ரூ.13,000க்கு 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு

Flipkart Big Billion Days 2022: புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க விரும்புபவர்களுக்கு எச்சரிக்கை. Flipkart Big Billion Days Sale ஆனது ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 23, 2022, 12:03 PM IST
  • பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022
  • 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் சலுகை
  • அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள்
வெறும் ரூ.13,000க்கு 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு title=

Flipkart Big Billion Days Sale தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ரூ.20,999 மதிப்புள்ள 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவியை ரூ.13,000க்கு கீழ் வாங்கலாம்.

இந்த விற்பனைக்கு முன், தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.20,999 ஆக இருந்தது. பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ.13,999 விற்பனை செய்யப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் படிக்க | iPhone 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி

Flipkart தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வங்கிச் சலுகைகளுடன் வெறும் ரூ.13,000க்கு வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்க விரும்புவோருக்கு ரூ.11,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்கும். இஎம்ஐ மூலம் வாங்க விரும்புவோருக்கு இஎம்ஐ விருப்பங்கள் ரூ.2,334 முதல் தொடங்குகின்றன.

Thomson 9A Series 43 Inch Smart TV அம்சங்கள் சென்ற வருடம் வெளியான ஸ்மார்ட் டிவி ஆகும். இதில் எல்இடி திரை உள்ளது. 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் முழு HD தெளிவுத்திறனை இது ஆதரிக்கிறது. 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் 1 ஈதர்நெட் போர்ட் உள்ளன. அதேபோல் இதில் பில்ட் இன் வைஃபை ஆதரவு கிடைக்கிறது.

தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது Android 9.0 இயங்குதளத்தில் இயங்குகிறது. செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட இடைமுகம் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது. 40W ஒலி வெளியீடு கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட், மியூசிக், நியூஸ், மூவி, கேம், யூசர் போன்ற ஆடியோ மோடுகள் இதில் உள்ளன. 

தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகள் உள்ளமைக்கப்பட்டவை. பிற பயன்பாடுகளை Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் இதில் ஸ்கிரீன் மிரரிங் வசதியும் உள்ளது. ரிமோட் கண்ட்ரோலில் Google Assistant ஆதரவு உள்ளது.

Flipkart தாம்சன் பிராண்டின் மற்ற ஸ்மார்ட் டிவிகளிலும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.9,000க்கு கீழ் வாங்கலாம். வங்கிச் சலுகைகளுடன் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். 

மேலும் படிக்க | Flipkart Big Billion days: ரூ. 15,000 சாம்சங் காலக்சி டாப் போனின் விலை வெறும் ரூ. 8,499

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News