ஜப்பானிய ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏர்வின்ஸ் டெக்னாலஜி 'பறக்கும் பைக்' என்ற கனவை நனவாக்கியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் நடைபெறும் வாகன கண்காட்சியின் போது இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் இந்த பைக்கில் ஒரு நேரத்தில் 30-40 நிமிடங்கள் மட்டுமே பறக்க முடியும். இந்த பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் 40 நிமிடங்கள் பறக்கும். இந்திய ரூபாயில் இதன் விலை சுமார் ஆறு கோடி ரூபாய் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கின் எடை சுமார் 300 கிலோ மற்றும் பறக்கும் போது சுமார் 100 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.  பைக்கில் பறக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பைக் இது. இந்த ஃப்ளையிங் பைக் தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பறக்கும் பைக்கின் பெயர் 


பறக்கும் பைக் கனவை நிறைவேற்றியுள்ள ஜப்பானின் AERWINS நிறுவனம், இதற்கு எக்ஸ் டூரிஸ்மோ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது HOVERBIKE என்றும் அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | மதுபோதையால் விபத்து - அரசு பேருந்தின் மீது மோதிய ஷேர் ஆட்டோ... சிகிச்சையில் ஓட்டுநர் 


பைக்கின் வேகம் மற்றும் விலை


மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் 40 நிமிடங்கள் பறக்கும் இந்த பைக்கின் விலை, இந்திய ரூபாயில் 6 கோடியாக இருக்கும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



2022ல் 200 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு


ஹோவர்பைக் கவாஸாகி பைக், ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் 200 பைக்குகளை விற்பனை செய்ய நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இந்த பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படாது. இந்த பைக்குகள் ஜப்பானில் விற்பனைக்கு வந்தாலும், அடுத்த ஆண்டு அதாவது 2023-ம் ஆண்டுக்குள் இந்த பைக்கின் விற்பனை அமெரிக்காவில் தொடங்கும். 2025ஆம் ஆண்டுக்குள் இந்த பைக் இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | PM Narendra Modi Birthday: பிரதமருக்கும் எண் 8-க்கும் உள்ள சம்பந்தம் என்ன?


அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியின் போது காட்டப்பட்ட வீடியோ


உலகின் முதல் பறக்கும் பைக் அமெரிக்காவில் நடைபெற்ற டெட்ராய்ட் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பறக்கும் பைக் அறிமுக வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பைக்கை வாங்குவது எப்படி? 


இந்த பைக் குறைந்த அளவே தயாரிக்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் 200 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்படும். AERWINS டெக்னாலஜிஸ் தளத்தில் சென்று ஆர்டர் செய்ய வேண்டும். சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த பைக் கிடைக்கிறது.


மேலும் படிக்க | எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமா? ஒரு மாதத்தில் அறிமுகமாகிறது சூப்பர் ஸ்கூட்டர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ