மின்சார பில் ஷாக் அடிக்காமல் இருக்கவும், சுற்றுசூழல் பாதுகாப்பாக இருக்கவும், குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவது மிகவும் பலன் தரும். அந்த வகையில், குறைந்த மின்சக்தியில் இஅய்ங்கும் ஆற்றல் கொண்ட சாதனங்கக்ளை அனைவரும் வாங்கும் வகையில், சமீபத்தில், EESL (Energy Efficiency Services Limited) தனது இ-காமர்ஸ் இணையதளமான EESLMart என்னும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் குறைந்த அளவிலான மின்சார சக்தியில் இயங்கும் சாதனங்களை வாங்குவதற்கான சிறந்த தளம் இது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EESL மின்சார சேமிப்புடன் கூடிய பாதுகாப்பான சுற்றுசூழலுக்கு உகந்த சாதனங்களை விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. EESLMart வழங்கும் சில சிறந்த சாதனங்களை வாங்கி உங்கள் வீட்டில் பொருத்தினால், மின்சார பில் கணிசமாக குறையும். சீலிங் பேன் முதல் ஏசி வரை இதில் கிடைக்கும் சில சிறந்த சாதனங்களை அறிந்து கொள்ளலாம்.


BLDC சீலிங் ஃபேன்- 5 ஸ்டார் (ரிமோட் உடன்)


BLDC பேன்கள் (BLDC Ceiling Fan- 5 Star - with remote) சிறந்தஆற்றல் திறன் மற்றும் செயல்திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 1200 மிமீ விட்டம் மற்றும் ஏரோ டைனமிக்ஸை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இதன் பிளேடுகள் அதிக காற்றை வழங்குகின்றன. இந்த மின்விசிறி நிமிடத்திற்கு 220 கன மீட்டர் காற்றை தரும். 5-நட்சத்திர BEE மதிப்பீட்டில், இது 28 முதல் 30 வாட்களை மட்டுமே பயன்படுத்துகிறது இதன் விலை வரிகள் உட்பட ₹ 2,543.00 என்ற அளவில் உள்ளது


BLDC சீலிங் ஃபேன்- 5 ஸ்டார் (ரிமோட் இல்லாமல்)


ரெகுலேட்டருடன் கூடிய BLDC சீலிங்பேன்கள் (BLDC Ceiling Fan- 5 Star - without remote) அதிகபட்ச செயல்திறன் கொண்டது. 140 முதல் 285 வோல்ட் வரையிலான பரந்த மின்னழுத்த வரம்பில் தடையின்றிச் செயல்படும். மின்சார ஏற்ற இறக்கங்களைப் பொருட்படுத்தாமல் சீரான காற்றை வழங்குகிறது. உங்கள் வீடு அல்லது வணிக இடங்களில் மின்விசிறிகளை பொருத்தினால், மின்சார பில் கணிசமாக குறையும்.


மேலும் படிக்க | ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+ 4G டவர்கள்... அதிரடி காட்டும் BSNL நிறுவனம்


LED பல்ப் (LED Bulb-3 Star)


EESLMart தளத்தில் கிடைக்கும் 3 ஸ்டார் மதிப்பீடு கொண்ட எல்இடி பல்ப் 9 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. பாரம்பரிய பல்புகளுடன் ஒப்பிடும்போது இந்த பல்பு மிக மிக குறைந்த அளவு மின்சார சக்தியில் ஒளியை கொடுக்கக் கூடியது. இதன் விலை வரிகள் உட்பட ₹ 75.00 என்ற அளவில் உள்ளது


எல்இடி பல்ப்- 6 வாட்ஸ் 5 ஸ்டார் (LED Bulb- 6 Watts 5 Star)


EESLMart தளத்தில் கிடைக்கும் 6 வாட் எல்இடி பல்ப், 9 வாட் எல்இடி பல்புக்கு சமமான வெளிச்சத்தை அளிக்கிறது, ஆனால் மின் நுகர்வில் குறிப்பிடத்தக்க 30% சேமிக்கலாம். குறைந்தபட்சம் 25,000 மணிநேர ஆயுட்காலம் கொண்ட இந்த பல்ப் 120 டிகிரிக்கும் அதிகமான அகலக் கற்றை கோணத்தைக் கொண்டுள்ளதால், ஒளியை சமமாகப் பரப்புகிறது. இதன் விலை வரிகள் உட்பட ₹ 75.00 என்ற அளவில் உள்ளது


20-வாட் இன்ட் பேட்டன் டியூப்லைட் (20-Watt Int Batten Tubelight)


2200 லுமன்கள் வெளிச்சம் மற்றும் 20 வாட்ஸ் மின் நுகர்வு கொண்ட இந்த LED டியூப் லைட்/பேட்டன் பாரம்பரிய மாடல்களுக்கு சிறந்த மாற்றாக உள்ளது. உயர் மின்னழுத்த பாதுகாப்புடன் நீண்ட நாள் உழைக்கக் கூடியது. இதன் விலை வரிகள் உட்பட ₹ 180.00 என்ற அளவில் உள்ளது.


EESL தளத்தில் கிடைக்கும் சிறந்த ஏசி


1.0 TR சூப்பர்-திறமையான 5 ஸ்டார் ஏசி ((1.0 TR Super-Efficient 5 Star AC)
EESL இன் அதி-திறமையான 1.0 டன் ஏர் கண்டிஷனர் 6.2 என்ற அளவில் இந்திய பருவகால ஆற்றல் திறன் மதிப்பீட்டை (ISEER) கொண்டுள்ளது. வழக்கமான 5-ஸ்டார் ஏசிகளுடன் ஒப்பிடும்போது, ​​மின்சாரத்தை மிக குறைந்த அலவில் பயன்படுத்தும். ஆற்றல் திறன் தொழில்நுட்ப அம்சம் மூலம் ஆண்டுதோறும் 640 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இதன் விலை வரிகள் உட்பட ₹ 33,456.01


1.5 டிஆர் சூப்பர் எஃபிஷியன்ட் 5 ஸ்டார் ஏசி (1.5 TR Super-Efficient 5 Star AC)


EESL தளத்தில் கிடைக்கும் டிரிபிள் இன்வெர்ட்டர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதி-திறமையான 1.5 டன் ஏர் கண்டிஷனரின், இந்திய பருவகால ஆற்றல் திறன் மதிப்பீடு (ISEER) 5.8 என்ற அளவில் உள்ளது. கூடுதலாக, தாமிர பாகங்களில் ஹைட்ரோஃபிலிக் மற்றும் நானோ பூச்சுகளுடன் ஆடோமேடிக் கிளீனிங் தொழில்நுட்பம் பராமரிப்பை எளிதாக்குகிறது. வழக்கமான 5-நட்சத்திர ஏசிகளுடன் ஒப்பிடும்போது, ​​ஆற்றல் திறன் தொழில்நுட்ப அம்சம் மூலம் ஆண்டுதோறும் 640 யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும். இதன் விலை வரிகள் உட்பட ₹ 44,141.99


மேலும் படிக்க | BSNL-க்கு உயிர் கொடுக்கும் மத்திய அரசு... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ