Audi e-tron Launch: எலோன் மஸ்கின் (Elon Musk) நிறுவனமான டெஸ்லா (Tesla) தனது மின்சார காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, ஜெர்மன் கார் தயாரிப்பாளர் ஆடி  நிறுவனம் அதை முந்துகிறது. ஆடி (AUDI) தனது இரண்டு மின்சார கார்களுக்கு முன்பதிவை தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

e-tron மற்றும்e-tron Sportback Audi  ஜூலை 22 ஆம் தேதி அறிமுகம்


ஆடி  கார் நிறுவனம் இந்தியாவில் இரண்டு மின்சார SUV கார்களை அறிமுகப்படுத்துகிறது. e-tron மற்றும்e-tron Sportback Audi  ஜூலை 22 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இவற்றை வாங்க ரூ .5 லட்சத்திற்கு முன்பதிவு செய்யலாம். இ-டிரான் பிராண்டின் கீழ் மேலும் பல புதிய மாடல்களை நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆடி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. 


ஆடி கடந்த ஆண்டு இறுதிக்குள் இ-ட்ரானை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அதன் அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மின்சார எஸ்யூவிகள் மூலம் நிறுவனம் தனது மின்சார வாகன பயணத்தை இந்தியாவில் தொடங்க உள்ளது ஆடி கார் நிறுவனம் . . பெட்ரோல் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலம் மின்சார கார்களுக்கு  சொந்தமானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்று ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறுகிறார். 


ALSO READ | Ola E Scooter: படங்களை பகிர்ந்து டீசர் வெளியிட்ட CEO, விரைவில் வருகிறது ஓலா!!


e-tron மற்றும் e-tron Sportback ஆகிய இரண்டும் இரட்டை மோட்டார் அமைப்பை கொண்டுள்ளன. 95 கிலோவாட் பேட்டரி மூலம், இதில், முறையே 300 கிலோவாட் / 408 ஹெச்பி சக்தியை உருவாக்குகிறது. இந்த எஸ்யூவிகள் 0 முதல் 100 கிமீ வேகத்திற்கு செல்ல 5.7 வினாடிகளில் வேகத்தை அதிகரிக்க முடியும். அவற்றின் ரேன்ஞ் 359 முதல் 484 கி.மீ. இந்த எஸ்யூவிகளை 11 கிலோவாட் ஏசி ஹோம் சார்ஜர் மூலம் 8.5 மணி நேரத்தில் சார்ஜ் செய்யலாம். 


டெஸ்லாவைப் (Tesla) பொருத்தவரை, நிறுவனம் தனது முதல் மின்சார டெஸ்லா மாடல் 3 காரை இந்தியாவில் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது. புனே சாலைகளில் பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. மாடல் 3 கார் டெஸ்லாவின் மிகவும் சிக்கனமான கார். இருப்பினும், நிறுவனம் அதன் அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலையும் கொடுக்கவில்லை. மாடல் 3 ஒரு செடான் வகை ஆகும், இது மணிக்கு 0-100 கிமீ வேகத்திற்கு 3.1 வினாடிகளில் வேகப்படுத்த முடியும். இதன் ரேன்ஞ் 500 கி.மீ.


Also Read | Ola, Yamaha, Suzuki: அட்டகாசமான Electric scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன, வாங்க தயாரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR