ரூ. 1000 வரை Paytm இல் கேஷ் பேக் பெறுவது எப்படி?
மொபைல் நிறுவனங்களால் ப்ரீ-பெய்டு திட்டங்களின் விலை அதிகரிப்பு குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், Paytm இன் புதிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Paytm New Cash Back Offer: நஷ்டத்தை சந்திப்பது என்ற பெயரில், சில நாட்களுக்கு முன்பு, ஜியோ, விஐ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் கட்டணத்தை 20 சதவீதம் வரை உயர்த்தின. இந்த உயர்வால் சிரமப்பட்ட மக்களுக்கு, Paytm-ல் இருந்து ஒரு நிவாரண செய்தி வந்துள்ளது.
ப்ரீபெய்டு பயனர்களுக்கு Paytm இன் சலுகை
தகவலின்படி, ப்ரீ-பெய்டு திட்டங்களைப் (Prepaid Plans) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் (Cashback) மற்றும் பிற வெகுமதிகளை Paytm அறிவித்துள்ளது. அதன்படி இந்த மகத்தான சலுகையை பயன்படுத்தி ரூ.1 ஆயிரம் வரை கேஷ்பேக் பெறலாம். இந்தத் திட்டங்களை நீங்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்போம்.
ALSO READ | Zomato IPO: ஒதுக்கப்பட்ட பங்குகளின் ஸ்டேட்டஸ், பிற விவரங்களுக்கான நேரடி இணைப்புகள்
முதல் முறை பயன்படுத்துபவர்களுக்கும் மட்டுமே கேஷ்பேக்
Paytm இன் படி, நீங்கள் கேஷ்பேக் பெற விரும்பினால், 'WIN1000' ப்ரோமோகோடைப் பயன்படுத்தி 1 ஆயிரம் ரூபாய் வரை வெல்லலாம். அதே நேரத்தில், Paytm பயனர்கள் FLAT15 ப்ரோமோகோடைப் பயன்படுத்தி முதல் முறையாக ரூ.15 நேரடி தள்ளுபடியைப் பெறலாம். பயனர் விரும்பினால், அவர் நிறுவனத்தின் பிற சலுகைகளையும் தேர்வு செய்யலாம்.
பயனர் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை
Paytm இந்த சலுகை அனைத்து Airtel, Jio, Wi, BSNL மற்றும் MTNL ஆகியவற்றிற்கும் பொருந்தும் என்று கூறியுள்ளது. Paytm இலிருந்து பரிவர்த்தனைக்கு பயனர் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் அதன் தற்போதைய பயனர்களுக்கு கேஷ்பேக் ஆஃபரையும் (Paytm New Cash Back Offer) வழங்கியுள்ளது. நிறுவனத்தின் பரிந்துரை திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், ஏற்கனவே உள்ள பயனர்கள் யாராவது Paytm ஐப் பயன்படுத்த மற்றொரு நபரை அழைத்தால், பரிந்துரைக்கும் பயனர் மற்றும் அழைக்கப்பட்ட நபர் இருவரும் ரூ.100-100 வரை கேஷ்பேக் பெறுவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.
ALSO READ | Paytm IPO news: Paytm IPO திட்டங்கள், பெரிய அளவில் நிதி திரட்டுவதற்கான ஸ்கெட்ச்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR