புதுடெல்லி: ஒரு வருடத்திற்கும் மேலாக, கொரோனா வைரஸ் தொற்றால் உலக மக்கள் கடும் அவதியில் உள்ளனர். சற்று குறைந்திருந்த தொற்றின் அளவு, தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றின் துவக்கத்திலிருந்தே பெரும்பாலானோர் வீட்டிலிருந்தே தங்கள் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பலருக்கு புதிய மடிக்கணினிகள் தேவைப்படுகின்றன. 


காலத்தின் தேவைக்கேற்ப, மலிவான விலையில், தரமான மடிக்கணினிகளை வாங்க, பல சிறந்த மடிக்கணினி டீல்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் காணக்கிடைக்கின்றன. நீங்களும் வீட்டிலிருந்து வேலை செய்பவராக இருந்தால், உங்கள் வேலை சுலபமாக நடக்க, சில மலிவான, அதே சமயம் தரமான மடிக்கணினிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம். 


Acer One 14
குறைந்த விலையில் ஒரு நல்ல லேப்டாப்பை நீங்கள் வாங்க விரும்பினால், Acer One 14 உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமையலாம். இந்த 14 அங்குல மடிக்கணினியில், AMD ப்ராசசர் வழங்கப்படுகிறது. லேப்டாப்பில் விண்டோஸ் 10 ஹோம் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. 4GB ரேம் கொண்ட இந்த லேப்டாப்பின் விலை ரூ .22,990 ஆகும்.


Lenovo Ideapad S145


மலிவான விலை கொண்ட மடிக்கணினிகளின் (Laptop) பட்டியலில் Lenovo Ideapad S145 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த கணினியில் AMD A6-9225 ப்ராசசர் உள்ளது. மடிக்கணினியின் மெமரி பற்றி பேசினால், இதில் 4GB RAM DDR4 மற்றும் 1TB HDD கொடுக்கப்பட்டுள்ளன. 15.6 இன்ச் எச்டி திரை கொண்ட இந்த மடிக்கணினியின் விலை ரூ .24,990 ஆகும்.


ALSO READ: Tech Guide: உங்கள் computer, laptop வேகத்தை அதிகரிக்க 5 எளிய வழிகள்!!


ASUS VivoBook 


பட்ஜெட் மடிக்கணினிகளின் பட்டியலில் ASUS VivoBook-கும் ஒரு மிகச்சரியான தேர்வாக இருக்கும். இந்த மலிவான மடிக்கணினியில் இன்டெல் குவாட் கோர் பென்டியம் சில்வர் என் 5030 செயலி உள்ளது. உட்புற ஸ்டோரேஜ் பற்றி பேசினால், இதில், 4GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 1TB HDD ஸ்டோரேஜும் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பின் விலை ரூ .24,990 ஆகும்.


வெறும் 17,190 ரூபாயில் AVITA Essential மடிக்கணினியை வாங்கலாம்
தற்போது அமேசான் வலைத்தளத்தில் இதை விட குறைவான மடிக்கணியை வாங்க முடியாது. AVITA Essential-ன் விலை வெறும் 17,190 ரூபாயாகும். இந்த லாபகரமான லேப்டாப்பில் Celeron N4000 ப்ராசசர் கிடைக்கிறது. இதனுடன் 4GB ரேம் மற்றும் 128GB SSD மெமெரியும் அளிக்கப்படுகின்றது. 


HP 15 Entry Level 


மலிவான மடிக்கணினிகளின் வரிசையில், HP 15 Entry Level ஒரு முக்கிய இடத்தில் உள்ளது. இந்த மடிக்கணினியின் விலை 23,990 ரூபாயாகும். இதில் AMD 3020e ப்ராசசர் அளிக்கப்பட்டுள்ளது. மடிக்கணினியில் 4GB DDR4 SDRAM மற்றும்  1TB HDD மெமரி வழங்கப்படுகிறது. ஏஎம்டி ரேடியான் கிராபிக்ஸ் கார்டுகள் இந்த லேப்டாப்பிற்கு மேலும் உயிரூட்டுகின்றன. 


ALSO READ: மிகக் குறைந்த விலை, அசத்தும் அம்சங்கள், 6000mAh பேட்டரி: கலக்க வருகிறது TECNO SPARK 7


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR