ஆண்ட்ராய்டு 10 வெளியீட்டிற்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த தேடுபொறி நிறுவனமான கூகிள் இறுதியாக அதன் பிளே ஸ்டோருக்கான டார்க் மோட் புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய புதுப்பித்தலுடன் பிளே ஸ்டோரில் உள்ள அனைத்து பயன்பாடுகளும் படிப்படியாக அவற்றின் டார்க் மோட் பயன்முறையைப் பெற அனுமதிக்கப்படுகிறது. தற்போது பிக்சல் கைபேசிகளில் கருப்பு கருப்பொருள் பிளே ஸ்டோர் வெளியிடப்படுகிறது. 


இந்த புதிய வடிவமைப்பு இதுவரை ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும், உலகளவில் மிக விரைவில் வெளிவரும் என்று செய்தி வெளியாகி வரகின்றது.


கூடுதலாக, ஜிமெயில் பயன்பாடு ஏற்கனவே டார்க் மோட் புதுப்பிப்பைப் பெறத் தொடங்கியது. மேலும் இது, பதிப்பு 2019.08.18.267044774 உடன் கிடைக்கும் எனவும், தற்போது பிளே ஸ்டோரில் இது கிடைக்கிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.


ஆண்ட்ராய்டு 10-ன் கணினி அளவிலான டார்க் மோட் பயன்முறையில், கூகிளின் சொந்த பயன்பாடுகள் டார்க் மோட் பக்கத்திற்குச் செல்வது மட்டுமல்லாமல், இந்த அம்சத்தைக் கொண்ட பிற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் அந்த அம்சத்தினை அளிக்கிறது. இருண்ட பயன்முறையுடன் கூடிய முக்கிய மூன்றாம் தரப்பு பயன்பாடுகளில் Pocket, Amazon Kindle மற்றும் Gboard ஆகியவை அடங்கும்.


இதனிடையே, அனைத்து பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 OTA புதுப்பிப்பு கோப்புகளை கூகிள் வெளியிட்டுள்ளது. அமைப்புகள்> கணினி> கணினி புதுப்பிப்புகள் வழியாக ஒருவர் புதிய புதுப்பிப்புகளைச் சரிபார்க்கலாம்.