புதுடெல்லி: ரஷ்யாவில் யாகுட்ஸ்க் Yakutsk மற்றும் மாகடன்  Magadan நகரங்களுக்கு இடையில், உள்ள ஒரு பகுதியில் நிலைக்கு கீழே, அதாவது -50 டிகிரி செல்சியஸியஸ் என்ற அளவில் தட்ப நிலை உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஷ்யாவில் (Russia) உள்ள இந்த பகுதியில் கூகுள் மேப்ஸ் உதவியுடன், காரை ஓட்டிச் சென்ற 18 வயது சிறுவன் செர்ஜி உஸ்டினோவ் மற்றும் அவரது நண்பர் விளாடிஸ்லாவ் இஸ்டோமின், கூகிள் பரிந்துரைத்தபடி, அந்த வழியாக காரை ஓட்டி சென்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் காணாமல் போயுள்ளனர். 


எனவே இவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டது. ஒரு வார தேடலுக்குப் பிறகு, காவல் துறை அதிகாரிகள்  காரில் 18 வயது இளைஞரின் சடலத்தைக் கண்டனர். அப்போது தட்பநிலை -50 செல்சியஸாகக் குறைந்துவிட்டதால் கார் பனியில் மூடியிருந்தது. இந்த  இரு நண்பர்களும் ‘ரோட் ஆஃப் போன்ஸ்’ என பெயரிடப்பட்ட ரஷ்யாவின் R504 கோலிமா நெடுஞ்சாலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். R504 கோலிமா நெடுஞ்சாலை 1,262 மைல் நீளமுள்ள ரஷ்ய பெடரல் நெடுஞ்சாலை ஆகும். இது ரஷ்யாவின் M56 பாதையின் ஒரு பகுதியாகும்.


Google map பரிந்துரைத்த படி இந்த வழியாக வந்த போது அவரது கார் பழுதடைந்த நிலையில், காரை ஓட்டிச் சென்ற அந்த இளைஞர் கடும் குளிர் காரணமாக உறைந்து, இறந்து போய் ஒரு வாரம் கழித்து, கண்டுபிடிக்கப்பட்டார்.


ALSO READ |  Australia island: இடத்தை கொடுத்தால் மடத்தை பிடுங்கும் சீனா..!!!


அவருடன் பயணம் செய்த மற்றொருவர், மோசமான நிலையில் இருந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் நடந்த சம்பவத்தை விவரித்தார். 


கூகிள் மேப்ஸ் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்க அதன் அமைப்பிலிருந்து பாதையை அகற்ற முடிவு செய்தது, குறிப்பாக குளிர்காலத்தில், இந்த சாலையை தனது மேப்பிலிருந்து நீக்குகிறது.


மேலும் குளிர் காலத்தில், இந்த சாலையில் போக்குவரத்து மிக மிக குறைவாகவே இருக்கும். மேலும் இந்த சாலையை பொறுத்தவரை, சாலையில் இருந்து பனியை நீக்கும் போதுமான உபகரணங்கள் வசதிகள் இல்லை என்பதும் ஒரு காரணம். 


இது போன்ற அசம்பாவிதங்கள் இருந்தாலும், மறுபுறம், கூகிள், கடந்த மாதம், Google Assistant Driving Mode மூலம், கோவிட் தொற்று அதிகம் உள்ள பகுதிகள் தொடர்பான பயனுள்ள தகவல்களை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல், உலகெங்கிலும் பயன்பாட்டில் உள்ள கூகுள் மேப்ஸ் , பயனர்களுக்கு, நிகழ்நேர  போக்குவரத்து தொடர்பான தகவல்களை வழங்கி உதவுகிறது.


ALSO READ | ரஷ்ய அதிபர் மாளிகையை பாதுகாக்கும் ஆந்தைகளும் கழுகுகளும்..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR