இனி GPay-ல் இந்த தொல்லை இருக்காது! பணம் அனுப்ப எளிய வழி!
கூகுள் பே ஆனது பயனர்களுக்காக பணம் செலுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் பே அதன் வாடிக்கையளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்திற்கு 'டேப் டூ பே' என்று பெயரிட்டுள்ளது, இந்த அம்சமானது ஒரே கிளிக்கில் பணத்தை செலுத்த அனுமதிக்கிறது. இதன் மூலம் POS மெஷினில் உங்கள் மொபைலைத் பயன்படுத்தி பணம் செலுத்தலாம். கூகுள் பே-யின் இந்த டேப் டூ பே ஆப்ஷனை பயன்படுத்தி யுபிஐ மூலம் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.
மேலும் படிக்க | QR கோடை ஸ்கேன் செய்யவேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!
வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்தும் வகையில் 'டேப் டு பே' அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சத்தை நீங்கள் ஏற்கனவே வங்கி கார்டுகளில் பார்த்திருக்கலாம், மக்கள் பணம் செலுத்த கார்டை POS மெஷினில் டேப் செய்வார்கள். இதேபோன்று பணம் செலுத்தும் முறை சாம்சங் பே-யில் உள்ளது, தற்போது பைன் லேப்ஸ் உடன் இணைந்து கூகுள் பே இந்த அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இனி வாடிக்கையாளர்கள் QR கோடை ஸ்கேன் செய்யவோ அல்லது யுபிஐ இணைப்பு செய்யப்பட்ட மொபைல் நம்பரையோ கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே வாடிக்கையாளர்கள் POS டெர்மினலில் மொபைலை டேப் செய்து பணத்தை செலுத்த வேண்டும். அதனையடுத்து வாடிக்கையாளர்கள் அவர்களது யுபிஐ பின்னை பதிவிட்ட பின்னர் இந்த பணம் செலுத்தும் செயல்முறை முழுமை பெறும். இந்த அம்சத்தை என்எஃப்சி செயல்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் யுபிஐ பயனர் எவராயிருந்தாலும் பயன்படுத்தலாம் என்று கூகுள் கூறியுள்ளது. மேலும் இதனை செயல்படுத்த விரும்புபவர்கள் மொபைலில் என்எஃப்சி தொழில்நுட்பம் இருக்க வேண்டும். இதற்கு உங்கள் மொபைலில் செட்டிங்கிற்கு சென்று அங்கு என்எஃப்சி-யை தேட வேண்டும். அதில் என்எஃப்சி இருந்தால் அதனை ஆன் செய்ய வேண்டும்.
அதன் பிறகு கூகுள் பே-யின் புதிய அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம், அதனையடுத்து மொபைலை அன்லாக் செய்யவேண்டும். பின்னர் மொபைலில் டெர்மினல் பேமேன்டை டேப் செய்யவேண்டும், அது லேப் டெர்மினலை ஆதரிக்கும். பிறகு நீங்கள் மொபைல் டெர்மினலை டேப் செய்வதன் மூலம் கூகுள் பே தாங்கவே ஓபன் ஆகும். இறுதியாக தொகையை தேர்ந்தெடுத்து ப்ரொசீட் கொடுத்ததும் பணம் செலுத்தும் செயல்முறை நிறைவடையும்.
மேலும் படிக்க | ஐபோன் 13 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி, முந்துங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR