புதுடெல்லி: மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Google மற்றும் Jio ஒன்றிணைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து மலிவான தொலைபேசிகளையும் மலிவான தரவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன. ஜியோவின் தளத்தில் கூகிள், தனது இந்தியா டிஜிடைசேஷன் நிதியிலிருந்து முதலீடு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தகவலை ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை (Sundar Pichai) வழங்கினார். மலிவு விலையில் தொலைபேசியை தயாரிப்பதில் Google மற்றும் Jio ஆகிய இரு நிறுவனங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்று அவர் கூறினார். 


இருப்பினும், தொலைபேசியின் விலை என்னவாக இருக்கும் மற்றும் அது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் அவர் கொடுக்கவில்லை. இந்த தொலைபேசியில் தரவு மலிவாக கிடைக்கும் என்ற தகவலை அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். மலிவான விலையில் கிடைக்கும் தரவுடன் மலிவு விலை ஸ்மார்ட்போனும் (Smartphone) கிடைப்பதால், நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இணைய வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.


ALSO READ: Google உங்களுக்கு அளிக்கும் 7 கோடி ரூபாய்: நீங்கள் செய்ய வேண்டியது இதைதான்!!


கூகிள் ரிலையன்ஸ் ஜியோவில் (Reliance Jio) 7.7% பங்குகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கூகிள் ஜியோவுக்கு ரூ .33,737 கோடியை செலுத்தியது. கூகிள் தனது 10 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய டிஜிட்டல் ஃபண்ட் (IDF) மூலம் புதிய முதலீட்டு வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் சில அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறினார்.


இந்த தொற்றுநோய் மக்களின் வாழ்க்கையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது என்று சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம், சுந்தர் பிச்சை 5 ஆண்டுகளில் 75,000 டாலர் முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால் நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்கான உந்துதல் துரிதப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.


புதிய விதிகள் குறித்து சுந்தர் பிச்சை கூறியது என்ன? 


இந்தியாவின் புதிய டிஜிட்டல் விதிகள் குறித்து கேட்கப்பட்டபோது, கூகிள் உள்ளூர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய உறுதிபூண்டுள்ளது என்று சுந்தர் பிச்சை கூறினார். விரைவாக மாறிவரும் உலக தொழில்நுட்பத்துடன் ஒத்திருக்கும் வகையில் ஒழுங்குமுறை கட்டமைப்பை அரசாங்கம் தயாரித்து வருவதால் கூகிள் தொடர்ந்து அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது என்றும் சுந்தர் பிச்சை மேலும் தெரிவித்தார்.


ALSO READ: டாக்டர் ஆனது Google: இனி போன் மூலமே 288 நோய்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR