Jio வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாமல் மாதம் 300 நிமிடம் இலவசமாக பேசிக் கொள்ளலாம்

இந்த கொரோனா தொற்று நோய் முடியும் வரை ஜியோ தொலைபேசி பயனர்கள் மாதந்தோறும் 300 குரல் அழைப்பு நிமிடங்களை இலவசமாகப் பெறுவார்கள் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : May 14, 2021, 05:14 PM IST
  • ஜியோ வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 300 நிமிடங்கள் இலவசமாகப் பெறுவார்கள்.
  • எந்தவொரு திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யும் அதே மதிப்பிலான திட்டம் இலவசமாக கிடைக்கும்.
  • இலவச நிமிடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து ஜியோ நிறுவனம் செயல்படும்.
Jio வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாமல் மாதம் 300 நிமிடம் இலவசமாக பேசிக் கொள்ளலாம் title=

நாட்டில் கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்தும் வரை ஜியோ தொலைபேசி (Jio Phone) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் 300 நிமிடங்கள் இலவசமாகப் பெறுவார்கள் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஜியோபோன் வாடிக்கையாளர்கள் எந்தவொரு திட்டத்தையும் ரீசார்ஜ் செய்யும் அதே மதிப்பிலான இலவச திட்டம் கூடுதல் அவர்களுக்கு கிடைக்கும். 

கொரோனா (COVID-19) தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக ரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோ தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு 300 நிமிட அவுட்கோயிங் கால் இலவசமாக வழங்குவதன் மூலம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள ஜியோ தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் இருக்கும் என ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அறிவித்துள்ளது.

ALSO READ |  வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும், சூப்பர் ரீசார்ஜ் ப்ளான்கள்

இந்த இலவச நிமிடங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிலையன்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து ஜியோ நிறுவனம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாதாந்திர அடிப்படையில் 300 இலவச நிமிடங்கள் கிடைக்கும். மேலும் இந்த சலுகை கொரோனா பெருந்தொற்று காலம் முழுதும் நீடிக்கும்.

ஆனால் இந்த சலுகை பெற சில வரம்பு உள்ளது. ஏனெனில் வாடிக்கையாளர்கள் தினமும் 10 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு மேல் இலவசமாக பயன்படுத்த முடியாது என்பதே இதன் பொருள். இந்த சலுகை ரீசார்ஜ் செய்ய முடியாமல் இருக்கும் ஜியோ தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

300 நிமிடங்களை இலவசமாக வழங்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட திட்டதை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு அதே மதிப்பு கொண்ட ரீசார்ஜ் திட்டத்தை இலவசமாகப் பெற ஜியோ சலுகை வழங்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, 75 ரூபாய்க்கு ஜியோபோன் வாடிக்கையாளர் ரீசார்ஜ் செய்தால், அவருக்கு கூடுதலாக அதே திட்டம் 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும்.

ALSO READ |  Jio அதிரடி: 1 ரூபாயில் 56 GB 4G இணைய வசதி, 28 நாள் வேலிடிட்டி, முந்துங்கள்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News