கூகுளுடன் டீல் பேசும் ஷேர் சாட் - எதுக்கு தெரியுமா?
ஷேர்சாட்டில் முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பிரபல ஷார்ட் வீடியோ செயலியாக இருக்கும் ஷேர்சாட் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. மியூசிக்கலியாக இருந்து பெயர்மாறிய டிக்டாக் இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்றது. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் செயலியாக உருவெடுத்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அந்த செயலிக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ஷேர்ஷாட், யூசர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | iQOO Neo 6: 50% தள்ளுபடியில் அமேசானில் ஸ்மார்ட்போன் விற்பனை
ஜோஸ் உள்ளிட்ட செயலிகள் போட்டியாக களமிறக்கப்பட்டாலும், ஷேர்சாட் யூசர்களின் விருப்பத்தில் லீடிங்கில் உள்ளது. இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் வீடியோ தளமான ஷேர்சாட் செயலியை நாள்தோறும் 180 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மொத்த எண்ணிக்கை 300 மில்லியன் யூசர்களையும் கடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த செயலியின் சந்தை மதிப்பு 3.7 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், இந்த செயலியில் முதலீடு செய்ய கூகுள் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. ஷேர் ஷாட் நிறுவனத்துடன் டீல் பேசிக் கொண்டிருக்கும் நிறுவனம் 300 மில்லியன் அமெரிக்கன் டாலரை ஷேர்சாட்டில் முதலீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டீல் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த டீல் முடிந்தால், இந்தியளவில் மட்டுமல்லால் உலகளவிலும் ஷேர்சாட் தன்னுடைய எல்லையை விரிக்கும். இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி, ஆங்கிலம் என 5 மொழிகளில் இருக்கும் ஷேர்சாட், பிராந்திய மொழிகளில் இன்னும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR