அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தைவான் மற்றும் ஆஸ்திரேலியாவில் Pixel 4a மற்றும் Pixel 5 கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது முதல் 5 ஜி போன்களான Pixel 4a மற்றும் Pixel 5 மொபைல்களை 499 அமெரிக்க டாலர் என்று விலை நிர்ணயித்திருப்பதாக கூகுள் திங்களன்று அறிவித்தது. 


அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தைவான் மற்றும் ஆஸ்திரேலியாவில் Pixel 4a மற்றும் Pixel 5 கிடைக்கும். Google 4a, 5.81 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி மொபைல் பிளாட்ஃபார்ம், 6 ஜிபி RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.


பட்ஜெட் உணர்வுள்ள வாடிக்கையாளர்களுக்கு தனது தயாரிப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் 5 ஜி அல்லாத Google 4a பதிப்பை 349 அமெரிக்க டாலரில் அறிமுகப்படுத்தியுள்ளது Google. Googleஇன் குறைந்த விலை சாதனங்கள் அதிக விற்பனையாவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவை பெரிய அளவில் லாபம் ஈட்டித் தருவதில்லை.  


இதில் 3140 mAh2 திறன் கொண்ட பேட்டரி இருக்கும். முன்புற கேமரா 8 MP மற்றும் பின்புற கேமரா 12.2 MP, இவை இரட்டை பிக்சல் கொண்டவை. Pixel 4a கருப்பு நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது Corning Gorilla Glass 3 உடன் ஒரு polycarbonate unibodyயைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 operating system இயக்க முறைமையைக் கொண்டுள்ளது.


மட்டுப்படுத்தப்பட்ட சந்தைப்படுத்தல் மற்றும் கடுமையான போட்டியினால், சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் Apple Inc போன்ற தொழில்துறை போட்டியாளர்களிடம் போட்டியிட இது உதவியாக இருக்கும்.  


Also Read | Airtel, Voda-Idea பிரீமியம் திட்டங்களுக்கு விரைவில் மூடுவிழா நடத்தும் TRAI


இந்தியாவில் Pixel 
கூகுள் தனது சமீபத்திய Pixel 4a ஸ்மார்ட்போனை அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும், ஆனால் அதன் புதிய 5 ஜி-இயக்கப்பட்ட Pixel 5 மற்றும் Pixel 4ஏ (5 ஜி) ஆகியவற்றை இந்தியா மற்றும் சிங்கப்பூர் சந்தைகளில் கிடைக்காது. 2019 அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் Pixel 4 மற்றும் 4XL 4 அறிமுகத்தை கூகுள் தவிர்த்ததும் நினைவிருக்கலாம்.


"கடந்த ஆண்டு, Pixel 3a மக்களுக்கு மலிவு விலையில் பிக்சலின் பயனுள்ள அம்சங்களைப் பெற வாய்ப்பளித்தது. இந்த ஆண்டு, அக்டோபரில் இந்தியாவில் அறிமுகமாகும் Pixel 4aவில் நவீன கேமரா இருக்கும்" என்று கூகுள் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.


அறிமுகப்படுத்துவதற்கு சற்று முன்னதாகத் தான் விலை அறிவிக்கப்படும் என்றாலும், இது "மிகவும் மலிவு விலையில்" கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. 2019 மே மாதத்தில், கூகுள் தனது ஸ்மார்ட்போன் வரிசையில் அதிக மலிவு சாதனங்களை கிடைக்கச் செய்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக Pixel 3a மற்றும் 3a XL ஆகியவற்றை ரூ .39,999 க்கு அறிமுகப்படுத்தியது. சர்வதேச அளவில் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Pixel 4 மற்றும் 4XLஇன் விலை 799 அமெரிக்க டாலர் (சுமார் ரூ .57,000) ஆகும்.


இது குறித்து கருத்து தெரிவிக்கும் Counterpoint Research அமைப்பின் இணை இயக்குனர் தருண் பதக், பிக்சல் சாதனங்களுடனான கூளின் சவால் தயாரிப்பு பற்றியது அல்ல, ஆனால் சேனல் அணுகல். " Pixel 4a உடன், கூகுள் சரியான திட்டம் வகுத்தால், Pixel 4a இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான பிக்சல் சாதனமாக மாற்றுவதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளன, குறிப்பாக சீனா எதிர்ப்பு உணர்வின் தற்போதைய சூழ்நிலையில் கூகுளின் இந்த பிக்சல் வெளிவருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.