Airtel, Voda-Idea பிரீமியம் திட்டங்களுக்கு விரைவில் மூடுவிழா நடத்தும் TRAI

TRAI, பாரதி ஏர்டெல் இடம் சுமார் இரண்டு டஜன் கேள்விகளை கேட்டுள்ளது. பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் அல்லாத பயனர்களுக்கான தரவு வேகத்தில் ஏதேனும் வரம்பு உள்ளதா என்ற கேள்வி பல ஊகங்களை எழுப்புகிறது... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 3, 2020, 03:35 PM IST
Airtel, Voda-Idea பிரீமியம் திட்டங்களுக்கு விரைவில் மூடுவிழா நடத்தும் TRAI title=

புதுடெல்லி: Bharti Airtel மற்றும் Vodafone ideaவின் 'Pirority Plans' குறித்து Trai கேட்ட கேள்விகளுக்கு அவை கொடுத்த பதில்களில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு திருப்தி ஏற்படவில்லை.  

டிராய், பாரதி ஏர்டெலிடம் சுமார் இரண்டு டஜன் கேள்விகளை கேட்டுள்ளது. பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் அல்லாத பயனர்களுக்கான தரவு வேகத்தில் ஏதேனும் வரம்பு உள்ளதா என்ற கேள்வி பல கவலைகளை எழுப்பியிருக்கிறது...

Trai தற்போது இந்த இரு நிறுவனங்களிடமும் சில கூடுதல் 'தொழில்நுட்ப' கேள்விகளைக் கேட்டுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் இது குறித்த தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.  

தங்களது விருப்பத்தின் அடிப்படையில் சலுகை கொடுக்க்க்கூடாது என்று Trai அறிவுறுத்துகிறது. நெட்வொர்க்கின் பிற பயனர்களுக்கான சேவைகளின் தரத்தை பாதிக்கவில்லை என்பதையும், எந்த விதிகளையும் மீறவில்லை என்பதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்குமாறு Trai இரு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.  

பாரதி ஏர்டெல் நிறுவனத்திடம் சுமார் இரண்டு டஜன் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கேள்வி என்னவென்றால், பிளாட்டினம் மற்றும் பிளாட்டினம் அல்லாத பயனர்களுக்கான தரவு வேகத்தில் ஏதேனும் வரம்பு உள்ளதா என்பதுதான். பிளாட்டினம் பயனர்களின் flow limit என்ன? என்பதற்கான பதிலே பிரீமியம் திட்டங்கள் தொடருமா என்பதை முடிவு செய்யும்...

Also Read | SBI சேமிப்பு கணக்கு: SBI YONO Appஇன் 'இன்ஸ்டா' அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஜூலை 31 அன்று பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு புதிய கேள்விகளை அனுப்பிய TRAI, ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.   இது தொடர்பாக ஏர்டெல் மற்றும் வோடபோனுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு இதுவரை பதில் வரவில்லை.

இரு நிறுவனங்களுக்கும் அவர்களின் பதிலுக்கான ஆதாரங்களையும், புள்ளிவிவரங்களையும் கொடுக்கவேண்டும் என்று TRAI  கேட்டுக் கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. கடந்த காலங்களில் இந்த நிறுவனங்கள் வழங்கிய பதில்கள் 'தெளிவற்றவை' என்றும், சில வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், பிற பிரீமியம் அல்லாத வகையைச் சேர்ந்த பிற பயனர்களுக்கு அது நியாயம் வழங்காமல் இருக்கக்கூடும்  என்று TRAI கவலை தெரிவித்துள்ளது.  

நுகர்வோருக்கான சேவைகளின் தரம் குறையவில்லை. பிரீமியம் / பிளாட்டினம் திட்டம் மற்ற வாடிக்கையாளர்களுக்கான இணைய அனுபவத்தை மோசமாக்கவில்லை என்று கூறும் இந்த நிறுவனங்களின் கூற்றுகளுக்கு ஆதரவாக இந்த நிறுவனங்கள் தரவை வழங்க வேண்டும் என்று TRAI விரும்புகிறது.

Trending News