OnePlus 10 Pro: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 10 ப்ரோ ஜனவரி 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது நிறுவனம் அறிமுகம் ஆகவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி வெர்ஜ் அறிக்கையின்படி,  ஒன்பிளஸ் 10 ப்ரோவில் (OnePlus 10 Pro) ரா பிளஸ் எனப்படும் படப்பிடிப்பு பயன்முறையைச் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்க புதுப்பிப்பாக இருக்கும். இது ஆப்பிளின் ப்ரோரா வடிவமைப்பைப் போலவே, கணக்கீட்டு புகைப்படம் எடுத்தல் மற்றும் ரா படப் பிடிப்பு ஆகியவற்றின் நன்மைகளை ஒருங்கிணைக்கிறது. ரா ப்ளே பயன்முறையானது ஒன்பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோவின் பாரம்பரிய ரா பயன்முறைக்கு மேம்படுத்தப்படும்.


ஒன்பிளஸ் 10 ப்ரோ புத்தம் புதிய டிரிபிள் ரியர் கேமரா வரிசை மற்றும் பின்புறத்தில் ஹாசல்பிளாட் கேமரா பிராண்டிங்குடன் வரும். வோல்கானிக் பிளாக் மற்றும் ஃபாரஸ்ட் எமரால்டு ஆகிய இரண்டு வண்ணங்களில் ஸ்மார்ட்போன் (Smartphone) அறிமுகம் ஆகும் என்றும் OnePlus தெரிவித்துள்ளது. இந்த போன் Qualcomm Snapdragon 8 Generation 1 சிப்செட் மூலம் இயக்கப்படும், Android 12 இயங்குதளத்தில் இயங்கும்.


ALSO READ | Tips And Tricks: போனை பார்க்காமலே, வாட்ஸ்அப் கால் விவரங்களை தெரிந்து கொள்வது எப்படி? 


இது தவிர, இந்த தொலைபேசியில் 5,000 mAh பேட்டரி பொருத்தப்பட்டதாக முன்பு கூறப்பட்டது. இது 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டால் ஆதரிக்கப்படும். இந்த சாதனம் Qualcomm Snapdragon 8 Generation 1 SoC மூலம் இயக்கப்படும். 


இந்த ஸ்மார்ட்போன் 2K தெளிவுத்திறனுடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. திரை இருபுறமும் வளைந்திருக்கும். மேல் இடது மூலையில் துளை-பஞ்ச் கட்அவுட் இருக்கும்.


இந்த போனுக்கான (Mobile Phone) எதிர்பார்ப்பு ஒன் பிளஸ் வாடிக்கையாளர்களிடம் நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது இது அறிமுகம் ஆகவுள்ள நிலையில், ஒன் பிளஸ் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR