உலகம் முழுவதும் அதிகம் எதிர்பார்க்கபட்ட OnePlus 10 Pro ஜனவரியில் வெளியாகும் என்று அதன் இணை நிறுவனர் மற்றும் CEO Pete Lau உறுதிப்படுத்தியுள்ளார். ஒன்பிளஸ் 9 ப்ரோவின் அடுத்த அப்டேட்டாக இந்த 10 Pro இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Snapdragon 8 Gen 1 SoC உடன் வரும் என்று கூறப்படுகிறது. OnePlus 10 Pro ஆனது OnePlus 10 மாடலுடன் இணைந்தே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு OnePlus 10-Series போன்கள் வெவ்வேறு வாடிக்கையாளர்களைக் குறிவைக்க சிறிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ALSO READ | Year Ender 2021: இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்
OnePlus 10 Pro போன் ஜனவரியில் வெளியாகும் என்று கூறிய Pete Lau Weibo, சரியான வெளியீட்டு தேதியை கூறவில்லை. மேலும் OnePlus நிறுவனம் ஜனவரி 5 ஆம் தேதி லாஸ் வேகாஸில் மிக பிரமாண்டமாக இதன் வெளியீட்டை நிகழ்த்த திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அந்த அரங்கில் நாம் OnePlus 10 மற்றும் OnePlus 10 Pro ஐப் பயன்படுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இந்த வார தொடக்கத்தில் Qualcomm வெளியிட்ட Snapdragon 8 Gen 1 SoC, இரண்டு போன்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய OnePlus 10 Pro ஆனது 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு வர உள்ளது.
OnePlus 10 Pro எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் 10 ப்ரோ பின்புற கேமரா மாட்யூலைக் கொண்டிருக்கலாம், ஒன்பிளஸ் 9 ப்ரோவின் ஜூம் அம்சங்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். பின் பகுதியில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும் இருக்கும்.
120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் QHD+ டிஸ்ப்ளே, 12GB வரை LPDDR5 ரேம், அதிகபட்சம் 256GB UFS 3.1 சேமிப்பு மற்றும் 5,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும். ஸ்மார்ட்போனில் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68-சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பையும் கொண்டிருக்கலாம். மேலும், போனில் OnePlus இன் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம், அதன் ஒரு பக்கத்தில் எச்சரிக்கை சைடர் மற்றும் ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான OxygenOS 12 இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ALSO READ | Amazon Bumper Offer; வெறும் 5 ஆயிருக்கு Vivoவின் 5G ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR