புல்லட் பைக்கில் ரொம்ப தூரம் பயணம் செய்ய ஆசையா... வருகிறது புதிய முரட்டு பைக் - முழு விவரம் இதோ!
Royal Enfield Himalayan 452: நடப்பு நவம்பரில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ஹிமாலயன் 452 மாடல் பைக்கின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Royal Enfield Himalayan 452: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 452 மாடல் பைக் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகம் செய்வதற்கு முன், பைக்கின் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிறுவனத்தின் பிரீமியம் அட்வென்ச்சர் பைக்கான இது பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவர உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு சக்திவாய்ந்த எஞ்சினைப் பெறும். பைக்கின் வடிவமைப்பும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இது தவிர, ஹிமாலயன் ஃபோர்ட்போலியோவில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மாடலின் புதிய பைக்கை நவம்பர் 7ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. வரவிருக்கும் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 452 பைக்கின் சிறப்பம்சங்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்
இந்த பைக்கின் அம்சங்களைப் பற்றி பார்த்தால், முழு எல்இடி விளக்குகள், டைப் சி யூஎஸ்பி போர்ட் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு மற்றும் கூகுள் மேப்ஸுடன் புதிய 4-இன்ச் வட்ட முழு TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலைக் கொண்டுள்ளது.
வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு பைக்கில் 452cc ஷெர்பா எஞ்சின் கிடைக்கும். இது ஒரு திரவ குளிரூட்டப்பட்ட இயந்திரம் (Liquid Cool). இது 8,000 rpm-இல் அதிகபட்சமாக 39.57 hp பவரையும், 5,500 rpm-இல் அதிகபட்சமாக 40 Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
5 வண்ணங்கள்
இந்த புதிய ஹிமாலயன் 453 பைக் 230 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை பெறுகிறது. அதாவது தடைக்கும், எஞ்சின் பாடிக்கும் உள்ள தூரமாகும். இந்த புதிய பைக்கின் எடை 196 கிலோ. 17 லிட்டர் எரிபொருள் டேங்கையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நீண்ட பயணங்களையும் மேற்கொள்ளலாம். இந்த பைக் ஹென்லி பிளாக், காமெட் ஒயிட், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், ஸ்லேட் பாப்பி ப்ளூ மற்றும் காஜா பிரவுன் ஆகிய ஐந்து வண்ணங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
பைக்கின் நிலையான இருக்கை உயரம் 825 மிமீ இருக்கும். இது 805 மிமீ மற்றும் 845 மிமீ வரை நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்தியாவில், புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452, KTM 390 அட்வென்ச்சர், ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400X மற்றும் BMW G 310 GS ஆகிய மாடல்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும்.
விலை...?
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக் நடப்பு நவம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிகிறது. இதன் விலை ரூ.2.6 லட்சம் முதல் ரூ.3.2 லட்சம் வரை விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பல்சர் காதலர்களே ரெடியா... விரைவில் NS400 - விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ