ஹார்லி-டேவிட்சன் x440 Scrambler... வருகிறது பீஸ்ட் பைக்கின் புதிய பதிப்பு - என்ன ஸ்பெஷல்!

Harley Davidson Bike: ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின்  x440 Scrambler பைக்கின் புதிய வேரியண்டின் சிறப்பம்சங்கள், எஞ்சின், அதன் விலை உள்ளிட்டவை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 25, 2023, 12:17 PM IST
  • ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்த கடந்த ஜூலையில் ஒரு மாடலை அறிமுகப்படுத்தியது.
  • இந்த புதிய வேரியண்ட் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல்.
  • Royal Enfield, KTM பைக்குகளுக்கு இது கடும் போட்டியளிக்கும்.
ஹார்லி-டேவிட்சன் x440 Scrambler... வருகிறது பீஸ்ட் பைக்கின் புதிய பதிப்பு - என்ன ஸ்பெஷல்!

Harley Davidson Bike: ஹார்லி-டேவிட்சன் x440 Scrambler (Harley-Davidson X440 Scrambler) பைக்கின் புதிய வேரியண்டின் அறிமுகம் குறித்து பல மாதங்களாக தொடர்ந்து தகவல் வெளியாகி வருகிறது. அந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் எஞ்சின் தொடர்பான பல தகவல்கள் கசிந்திருக்கின்றன.  இந்நிலையில், ஹார்லி டேவிட்சன் x440 Scrambler பைக்கின் புதிய எடிஷன் குறித்து தற்போது மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. 

Add Zee News as a Preferred Source

தற்போதுள்ள வேரியண்டைப் போலவே, இது இந்தியாவை மையமாகக் கொண்டு, அதாவது இந்திய சாலைகளுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. வரவிருக்கும் இந்த பைக்கில் 440cc எஞ்சின் முதல் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் வரை அனைத்தையும் பெற முடியும்.

முக்கிய அம்சங்கள்

ஹார்லி-டேவிட்சன் x440 Scrambler பைக்கின் வடிவமைப்பு தற்போதுள்ள அந்த மாடலின் Scrambler பைக்கை போன்றே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் 3.5-இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் கன்சோலைக் கொண்டிருக்கும், இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மொபைல் கால் மற்றும் மெசேஜ் அலர்ட் மற்றும் மியூசிக் கண்ட்ரோல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது வயர்-ஸ்போக் டியூப்லெஸ் சக்கரங்களை பெறும் எனவும் தெரிகிறது. இது தவிர, வரவிருக்கும் பைக்கிலும் முந்தைய மாடல்களை போல் வலுவான சஸ்பென்ஷன் வழங்கப்படும் எனவும் தெரிகிறது.

மேலும் படிக்க | பல்சர் காதலர்களே ரெடியா... விரைவில் NS400 - விலை, ரிலீஸ் தேதி, சிறப்பம்சங்கள் இதோ!

எஞ்சினில் என்ன எதிர்பார்க்கலாம்?

ஹார்லி டேவிட்சனின் வரவிருக்கும் பைக் 440cc சிங்கிள் சிலிண்டர், இரண்டு வால்வ் எஞ்சின் (Two Valve Engine) உடன் வர உள்ளது. இதன் எஞ்சின் 6,000 RPM-இல் (Revolutions per minute) 27 bhp ஆற்றலையும், 4,000 RPM-இல் 38 Nm டார்க்கையும் (Torque - முறுக்கு விசை) உருவாக்கும். மேலும் இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

விலை எவ்வளவு வரும்?

ஹார்லி-டேவிட்சன் நிறுழனம் அதன் x440 Scrambler பைக்கின் புதிய வேரியண்ட் குறித்து இதுவரை எவ்வித தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பைக் அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விலை இந்தியாவில் ரூ. 2 முதல் 3 லட்சம் வரையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இது Triumph, KTM, Royal Enfield போன்ற பிரீமியம் வகை பைக் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என்பதை மறுக்க முடியாது. 

2023 வேரியண்டில் என்ன இருந்தது?

முன்னதாக, ஹார்லி-டேவிட்சன் இந்த ஆண்டு ஜூலை மாதம் x440 ஸ்க்ராம்ப்ளர் 2023 வேரியண்டை அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் விலை ரூ.2.29 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த பைக் மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றது. இதன் எரிபொருள் டேங்க் 13.5 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் எல்இடி ஹெட்லேம்ப் உள்ளது. இது DRL மற்றும் 320mm முன் டிஸ்க் பிரேக் மற்றும் இரட்டை சேனல் ABS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பார்த்தாலே கிக்கேத்தும் பைக்...

முன்னதாக, ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அசதன் பான் அமெரிக்கா 1250 அட்வென்ச்சர் டூரர் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக்கில் 8,750 RPM-இல் 151 bhp பவரையும், 6,750 RMP-இல் 128 Nm உச்சபட்ச டார்க்கையும் வழங்கும் 1,252cc வி-ட்வின், லிக்விட்-கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இதில் சிறந்த பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளது. இதன் விலை ரூ.24.9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Honda CB300R: ஹோண்டாவின் சக்திவாய்ந்த பைக்... விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News