புதுடெல்லி: எரிபொருள் இல்லாமல் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான தேவையும், உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில், மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரியும் விபத்துகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில், மின்சார வாகன தயாரிப்பாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு திறமையான மற்றும் பாதுகாப்பான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.


அதன் ஒரு படியாக, பேட்டரி சான்றிதழ் மற்றும் தரக் கட்டுப்பாட்டில் நிலையான இயக்க நடைமுறையை (standard operating procedure (SOP)) மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக அரசாங்கம் குழு ஒன்றை அமைத்துள்ளது.


அந்தக் குழுவில் இந்திய அறிவியல் நிறுவனம்-பெங்களூரு, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம்-மெட்ராஸ் போன்றவற்றின் நிபுணர்கள் உள்ளனர்.  


மேலும் படிக்க | மீண்டும் தீ பிடித்த இ-பைக்: பேட்டரி வெடித்ததால் ஷோரூமில் தீ விபத்து


பேட்டரி சான்றளிப்பு மற்றும் சோதனை மற்றும் முக்கிய பேட்டரி கூறுகளின் சரிபார்ப்பு ஆகியவற்றிற்கான நிலையான இயக்க நடைமுறையை உருவாக்குவதற்கு இந்தக் குழு பணிபுரிவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Ola Electric, Okinawa Autotech மற்றும் Pure EV போன்ற EV உற்பத்தியாளர்களுக்கு கடந்த வாரம் மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது.


பழுதடைந்த மின்சார இரு சக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு விநியோகித்ததற்காக அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்த ஷோ-காஸ் நோட்டீசில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  


இந்த நோட்டீஸ்களுக்கு விரிவான பதில் அளிக்க, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த மாத இறுதி (2022 ஜூலை 31) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



நோட்டீசுக்கான பதில்கள் கிடைத்தவுடன், தவறு செய்யும் EV தயாரிப்பாளர்களுக்கு எதிராக எந்த தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கும்.


ஏப்ரலில் இ-ஸ்கூட்டர்கள் வெடித்ததை அடுத்து, கடந்த மாதம், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority), ப்யூர் EV மற்றும் பூம் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.


மின்சார வாகனங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு நியமித்துள்ள விசாரணைக் குழுவின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள், நாட்டில் ஏறக்குறைய அனைத்து மின்சார இரு சக்கர வாகன தீ விபத்துகளிலும் பேட்டரி செல்கள் அல்லது வடிவமைப்பில் உள்ள சிக்கல்களை அடையாளம் கண்டுள்ளது.


பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமும், இருசக்கர வாகன பேட்டரிகளில் கடுமையான குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தது.


Okinawa Autotech, Pure EV, Jitendra Electric Vehicles, Ola Electric மற்றும் Boom Motors போன்ற இ-பைக் வாகன உற்பத்தியாளர்கள் "செலவைக் குறைக்க குறைந்த தரப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கலாம்" என்று DRDO ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க | சென்னையில் 30 நிமிட பயணம் இனி 4 நிமிடத்தில்..! தமிழக அரசின் சூப்பர் பிளான்!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR