Samsung Galaxy Smartphone: பிரபல ஸ்மாட்போன் நிறுவனமான சாம்சங்கின் Samsung Galaxy S22 5G இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் ஆகும். பல நாட்களாக இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் டாப் தேர்வாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இன்னும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆசைப்படுகிறார்கள். இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த இன் கிளாஸ் அம்சங்களே இதற்கு முக்கிய காரணமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் அற்புதமான வடிவமைப்பும் அம்சங்களும் சாம்சங் காலக்சி எஸ்22 5ஜி போனை அதன் வரம்பில் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் வைத்திருக்கிறது. இப்போது Galaxy S23 சீரிஸும் சந்தையில் வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கேலக்ஸி எஸ்22 விலையில் பெரும் குறைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒரு மிக நல்ல கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல் அதன் டிஸ்ப்ளே மற்றும் அதன் கேமராவும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக உள்ளன. 


சாம்சங் காலக்சி எஸ்22 5ஜி பிரியர்கள் இப்போது இந்த போனை மிகவும் மலிவு விலையில் வாங்கலாம். ஏனெனில் ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் இதில் தள்ளுபடியை வழங்குகிறது. நீங்களும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், அதில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | 40,000 ரூபாய்க்குள் கிடைக்கும் அசத்தலான டாப் கிளாஸ் ஸ்மார்ட்போன்கள்!


இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சலுகை என்ன? 


Samsung Galaxy S22 5G இல் கிடைக்கும் சலுகையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், அதன் விலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான விலை 91,999 ரூபாய் ஆகும். எனினும், வாடிக்கையாளர்கள் இதை வெறும் 50,499 ரூபாய்க்கு வாங்க முடியும். ஏனெனில் இதில் 45 சதவிகிதம் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பெரிய தள்ளுபடிக்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும், ஏனெனில் சிறந்த அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் கூடிய இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அவர்கள் மிகக்குறைந்த விலையில் தற்போது வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் மிகப்பெரிய பெரிய தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும். 


Samsung Galaxy S22 5G: விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்


விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது டைனமிக் AMOLED டிஸ்ப்ளே ஆகும். இந்த டிஸ்ப்ளே மூலம், பயனர்கள் இந்த வரம்பின் மற்ற ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாத ஒரு திடமான அனுபவத்தைப் பெறுகிறார்கள். நீங்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், அது உங்களுக்கு லாபகரமான டீலாக கண்டிப்பாக இருக்கும்.


சாம்சங்கின் மற்றொரு டாப் போனுக்கு பிளிப்கார்ட்டில் அதிரடி தள்ளுபடி கிடைக்கிறது. அதன் விவரங்களை இங்கே காணலாம்.


ப்ளிப்கார்ட் விற்பனையில், ரூ.33,249 விலைகொண்ட சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 ஆனது தற்போது தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,750க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.  சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலின் விலை ரூ.49,999 ஆகும், இது அதிகாரப்பூர்வ விலையை விட ரூ.46,000 குறைவு.  ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி சாம்சங் மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.4,999 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.  இந்த கேஷ்பேக் ஆஃபரின் மூலம் மொபைலின் விலை ரூ.45,999 ஆக குறைகிறது. இதுதவிர பிளிப்கார்ட் நிறுவனம் கூடுதலாக பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து புதிய சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.28,250 வரை தள்ளுபடிகளை வழங்குகிறது.  அனைத்து வங்கிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்குப் பிறகு, சாம்சங் கேலக்சி Z ஃப்ளிப் 3 மொபைலானது ப்ளிப்கார்ட் விற்பனையில் ரூ.33,249 தள்ளுபடிக்குப் பிறகு ரூ.16,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | யூடியூப் போட்ட பக்கா பிளான்... இனி இதனை பயன்படுத்த முடியாது..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ