151 கி.மீ செல்லும் சூப்பரான ஸ்பிளெண்டர் பைக்
சாதாரண ஹீரோ ஸ்பிளெண்டரை எலக்ரிட் வாகனமாக மாற்றி அதனை 151 கி.மீ வரை பயணிக்கலாம்.
ஸ்பிளெண்டர் பைக் பயன்படுத்துபவர்கள் நாடு முழுவதும் அதிகம். பட்ஜெட் விலையில் கிடைக்கும் வாகனம் என்பதால் மக்கள் அதிகம் இந்த பைக்கை விரும்பி வாங்குகின்றனர். இந்நிலையில், லேட்டஸ்ட் அப்டேட்டாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்பிளெண்டர் பைக்கை அப்படியே மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ளக்கூடிய அம்சம் ஒன்று ஆட்டோமொபைல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நிறுவனமான GoGoA1, Hero Splendor பைக்கிற்கான மின்சார மாற்று கருவியை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஏப்ரலில், இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) மூலம் இந்தக் கருவிக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் படிக்க | ரூ.149 திட்டத்தில் 1 GB கொடுக்கும் ஜியோ - ஏர்டெல் கலக்கம்
இந்த கிட் மூலம் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை எவரும் எலக்ட்ரிக் பைக்காக மாற்ற முடியும். கிட்டில் 2 கிலோவாட் திறன் கொண்ட மின்சார மோட்டார் மற்றும் 2.8 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக் ஆகியவை அடங்கும். இது தவிர, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. GoGoA1 இன் Hero Spendor எலக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் இந்தியாவில் ரூ. 37,700 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில் பேட்டரி பேக் மற்றும் சார்ஜிங் அடாப்டரின் விலை தனித்தனியாக ரூ.65,606 ஆகும். இந்த வழியில், முழு மின்சார கிட்டுக்கு மொத்தம் ரூ.1,03,306 (ஜிஎஸ்டி சேர்க்காமல்) செலுத்த வேண்டும்.
நாம் குறிப்பிட்டுள்ளபடி, கிட் 2 kW மின்சார மோட்டார் மற்றும் 2.8 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. இது ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் கூடிய பின்புற சக்கர ஹப் மோட்டார் ஆகும். அமைப்பில் DC-DC மாற்றி, புதிய முடுக்கி வயரிங், கன்ட்ரோலர் பாக்ஸுடன் ஒரு கீ சுவிட்ச் மற்றும் ஒரு புதிய ஸ்விங்கார்ம் ஆகியவை அடங்கும். அதன் பேட்டரி பேக் முழு சார்ஜில் 151 கிமீ வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. இதற்காக ஆர்டிஓ - விடம் சில அனுமதிகளையும் நீங்கள் பெற வேண்டியிருக்கும். உங்கள் பைக் மின்சார வாகனமாக மாற்றம் செய்யப்பட்டு விட்டால், பைக்கில் இருக்கும் நம்பர் பிளேட் பச்சை நிறத்துக்கு மாற்றம் செய்யப்படும்.
மேலும் படிக்க | ரூ. 6 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் அசத்தலான 7 சீட்டர் கார்கள்
எலக்டிரிக் கன்வெர்சன் கிட் விலை குறைவாக இருந்தாலும், பேட்டரி உள்ளிட்ட மற்ற கருவிகள் இருமடங்கு விலையை கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மற்ற எலக்டிரிக் பைக்குகளின் விலையை விட அதிகமாக இருப்பதாக மார்க்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR