Honda Activa H Smart: கார் போன்ற சூப்பர் அம்சம், வெறும் ரூ.9000-க்கு வாங்கி வரலாம்
Honda Activa Smart: இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இதில் கார் போன்ற ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாவியின் உதவியுடன் ஸ்கூட்டர் லாக் / அன்லாக் செய்யப்படுவதுடன் இதன் மூலம் சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம்.
ஹோண்டா ஆக்டிவா இஎம்ஐ கால்குலேட்டர்: ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் சமீபத்தில் தனது புதிய ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட் (Honda Activa H-Smart) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இதில் கார் போன்ற ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாவியின் உதவியுடன் ஸ்கூட்டர் லாக் / அன்லாக் செய்யப்படுவதுடன் இதன் மூலம் சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம். சாவி 2 மீட்டர் வரம்பிற்கு வெளியே இருந்தால், ஸ்கூட்டர் தானாகவே பூட்டப்படும் (லாக் செய்யப்படும்). ஆகையால், இந்த ஸ்கூட்டர் திருடப்பட வாய்ப்பு இல்லை.
இந்த ஸ்கூட்டர் மூன்று வகைகளில் வருகிறது. வெறும் 9000 ரூபாய்க்கு இந்த அசத்தலான ஸ்கூட்டரை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம்.
ஸ்கூட்டர் ஆன்ரோடு விலை
இந்த ஸ்கூட்டர் ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் மற்றும் எச்-ஸ்மார்ட் ஆகிய மூன்று வகைகளில் வருகிறது. முக்கிய அம்சமான சாவி கொண்ட அம்சம் (கீ ஃபீச்சர்) H-Smart மாறுபாட்டில் மட்டுமே கிடைக்கும். விலையைப் பற்றி பேசினால், இதன் ஆன்ரோடு (டெல்லி) விலை பின்வருமாறு உள்ளது:
- ஸ்டாண்டர்ட் வேரியன்ட் ரூ.85,298
- டீலக்ஸ் ரூ.88,027
- எச்-ஸ்மார்ட் வேரியன்ட் ரூ.93,238.
உங்களுக்கும் புதிய ஹோண்டா ஆக்டிவாவை வாங்கும் எண்ணம் உள்ளதா? இதை வாங்க எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் அறிய விரும்புகிறீர்களா? ஸ்கூட்டரின் மாறுபாடு வாரியான ஆன்-ரோடு (டெல்லி) விலை மற்றும் தவணைத் தொகையைக் காட்டும் அட்டவணை உள்ளது. இதில் நாம் முன்பணம் ரூ.9000, கடன் காலம் 3 ஆண்டுகள் மற்றும் 10% வட்டி விகிதம் என வைத்துள்ளோம். இருப்பினும், கடன் காலம் மற்றும் முன்பணம் செலுத்தும் தொகையை நீங்களே தேர்வு செய்யலாம். மேலும் வட்டி விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு இஎம்ஐ
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் ஆன்ரோடு (டெல்லி) விலை ரூ.85,298 முதல் ரூ.93,238 வரை உள்ளது. ஹோண்டா ஸ்கூட்டரின் டாப்-எண்ட் எச்-ஸ்மார்ட் வேரியண்ட்டை வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதன் தற்போதைய எக்ஸ் ஷோரூம் விலை ரூ.80,537 ஆக உள்ளது. மதிப்பிடப்பட்ட ஆன்ரோடு விலையான (டெல்லி) ரூ.93,238-ல் ரூ.9,000 முன்பணமாக செலுத்தினால், ரூ.84,238 கடனாகப் பெற வேண்டும். 3 ஆண்டுகளுக்கு இந்த தொகைக்கு, நீங்கள் EMI ஆக ரூ.2,718 செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ