ஓப்போ நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் டிசம்பர் மாத வாக்கில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஓப்போ ஃபைண்ட் N ப்ளிப் எனும் பெயரில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் புதிய ஓப்போ ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்ஃபோன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் ஓப்போ ஃபைண்ட் N ப்ளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கறுப்பு, வெள்ளை மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும். 


மேலும் படிக்க | iPhone 13 Pro Max: இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, அசத்தும் பிளிப்கார்ட்


இந்த ஸ்மார்ட்ஃபோன் சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4, மோட்டோ ரேசர் 2022 மற்றும் ஹூவாய் P50 பாக்கெட் நியூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தொழில்நுட்ப வல்லுநர்களால் கருதப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஓப்போ ஃபைண்ட் N ப்ளிப் மாடலில் 6.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED பேனல், 3.26 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, 2520x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும். 


இத்துடன் 32MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 8MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் ஓப்போ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக- ஓப்போ ஃபைண்ட் N-ஐ அறிமுகம் செய்தது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஓப்போ ஃபைண்ட் N2 பெயரில் இந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ