iPhone 13 Pro Max: இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, அசத்தும் பிளிப்கார்ட்

iPhone Discount: வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அதில் ஒரு பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 20, 2022, 12:06 PM IST
  • ஐபோனில் பிளிப்கார்டில் மாபெரும் தள்ளுபடி கிடைக்கிறது.
  • வாடிக்கையாளர்கள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் 128ஜிபி மாடலை பிளிப்கார்டில் ரூ. 129900-க்கு வாங்கலாம்.
  • இருப்பினும் இதில் மற்றொரு சலுகையும் அளிக்கப்படுகின்றது.

Trending Photos

iPhone 13 Pro Max: இதுவரை இல்லாத அளவு தள்ளுபடி, அசத்தும் பிளிப்கார்ட் title=

ஐபோன் தள்ளுபடி: பிரபலமான ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிபார்ட், அமேசான் போன்ற அன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலவித இன்ப அதிர்ச்சிகளை அளிக்கின்றன. கேஜெட்டுகள், ஆடை அணிகலன்கள், மேக்-அப் ஆக்சஸெரீஸ் என அனைத்து வகை பொருட்களிலும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தீபாவளியன்றும் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. 

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஒரு ஜெனரேஷன் பழைய மாடலாக இருந்தாலும், அதன் மோகம் மொபைல் பயனர்களிடையே அப்படியேதான் உள்ளது. மேலும் மக்கள் அதை வாங்க பணம் செலவழிக்க தயாராக உள்ளனர். இதன் விலை குறைந்துவிட்டது என நிங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில், இன்னும் இதன் விலை 1 லட்சத்திற்கு மேல்தான் உள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அதில் ஒரு பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale:42 இஞ்ச் ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ.2400, அசத்தல் தள்ளுபடி 

தள்ளுபடி எங்கே கிடைக்கிறது

ஐபோனில் இந்த மாபெரும் தள்ளுபடி பிளிப்கார்டில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் 128ஜிபி மாடலை பிளிப்கார்டில் ரூ. 129900-க்கு வாங்கலாம். இருப்பினும் இதில் மற்றொரு சலுகையும் அளிக்கப்படுகின்றது. இதன் மூலம், நீங்கள் அதிக தொகையை சேமித்து, தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம். 

பரிமாற்ற போனஸின் பலனைப் பெறுங்கள்

ஐபோன் மாடலில், வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ், அதாவது பரிமாற்ற போனஸைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி வாங்கும் வாடிக்கையாளர்கள், தங்களது பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால், ரூ. 16,900 தள்ளுபடி கிடைக்கும். இது எக்ஸ்சேஞ்ச் போனஸின் கீழ் வழங்கப்படுகிறது. 

உங்களிடமும் நல்ல நிலையில் உள்ள பழைய தொலைபேசி இருந்தால், அதை பரிமாற்றி, இந்த சலுகையின் கீழ் ரூ.1,29,000 இல் 16,900 ரூபாய் குறைக்கலாம்.

மேலும் படிக்க | கிடுகிடுவென உயரப்போகுது விலை... ஸ்மார்ட்போனை சீக்கிரம் வாங்குங்க... 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News