கொரோனா வைரஸ் நோயாளிகளை நண்பர்களோ அல்லது உறவினர்களோ பார்க்க முடியாது என்பது பெரும் சோகம். ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவமனை தனது வார்டுகளில் ரோந்து செல்ல வாடிக்கையாளர் சேவை செய்யும் மித்ரா என்ற ரோபோவை (robot) அனுப்பி, நோயாளிகளுக்கு ஆறுதல் அளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மித்ரா என்ற இந்தி சொல்லுக்கு “நண்பர்” என்று பொருள். 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மித்ரா உரையாடியது அந்த சமயத்தில் மிகவும் பிரபலமானது.


மித்ரா ரோபோவின் கண்கள் முக அங்கீகார தொழில்நுட்பத்துடன் (facial recognition technology) பொருத்தப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பத்தால், இதற்கு முன்னர் தொடர்பு கொண்ட நபர்களை மித்ரா நினைவுபடுத்திக் கொள்ள முடியும். மித்ராவின் மார்பில் இணைக்கப்பட்ட ஒரு டேப்லெட் நண்பர்களையும், உறவினர்களையும் பார்க்க நோயாளிகளுக்கு உதவி செய்கிறது. அதுமட்டுமல்ல, வார்டுகளுக்கு நேரடியாக வந்து நோயாளிகளை பார்க்க வர முடியாத மருத்துவ ஊழியர்களும், ரோபோவின் மார்பில் பொருத்தப்பட்டுள்ள டேப்லெட் மூலமாக பார்த்து ஆலோசனை சொல்லலாம்.  


"நோயாளிகள் குணமடைய நிறைய காலம் ஆகிறது, இந்த நேரத்தில், நோயாளிகள் தங்கள் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் ஏக்கப்படுகின்றனர். அன்பும் அரவணைப்பும் அதிகம் தேவைப்படும் நேரத்தில் கொரோனாவின் பாதிப்பால் அந்த அனுசரணை அவர்களுக்கு கிடைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அவர்களின் குடும்பங்கள் அதிகம் தேவைப்படும்போது, அவர்களால் பார்வையிட முடியவில்லை" என்று தலைநகர் டெல்லிக்கு அருகில் அமைந்திருக்கும் நொய்டா எக்ஸ்டென்சனில் உள்ள Yatharth Super Speciality Hospital நிர்வாகம் கூறுகிறது.  


மித்ரா முக்கியமாக தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி தொடர்பு கொள்ள முடியாத நோயாளிகளால் பயன்படுத்தப்படுகிறது.


நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்க நிபுணர்களுடன் தொலைதூர ஆலோசனைகளுக்காகவும் மித்ரா பயன்படுத்தப்படுகிறது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் இயந்திரங்கள் பணியாற்றும். என் இனிய இயந்திரா என்று மித்ராவுக்கு நன்றி கூறும் நோயாளிகள் பலர்... 


Also Read | இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிரும் அதிசயம்! காரணம் தெரியுமா?