புதுடெல்லி: உலகம் முழுவதும் பல வகையான காளான்கள் காணப்படுகின்றன. அதில் ஒளிரும் களானும் ஒருவகை. நட்சத்திரங்கள் வானில் மின்னுவது போல, இந்த காளான்கள் பூமியில் ஆங்காங்கே மின்னி, வானமோ இல்லை பூமியோ என்று நமக்கு மன மயக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரவில் காளான்கள் பச்சை நிறத்தில் ஒளிர்வதைப் பார்க்கும்போது அதிசயமாக உள்ளன. நீலம் மற்றும் பச்சை வண்ணம் கலந்த வெளிச்சத்தில் ஒளியை பரப்புவது நாம் உண்ணும் காளான் என்பது மேலும் அதிக ஆச்சரியமாக இருக்கிறது.
பல வகையான காளான்கள் உள்ளன
உலகம் முழுவதும் பல வகையான காளான்கள் காணப்படுகின்றன. காளான் சைவத்தில் சேர்க்கப்படும் ஒரு தாவர வகை. இது பிற காய்கறிகளைப் போலவே பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. தக்காளியைப் போலவே சூப் மற்றும் பீட்சாவிலும் (Pizza) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக நாம் சாப்பிடும் காளான்கள் சில வகைகள் தான்.
ஆனால் இரவின் இருளில் ஒளிரும் காளான் எல்லா இடங்களிலும் விளைவதில்லை. இதுவொரு தனித்துவமான காளான் வகையாகும். இதைப் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க முடியாது. இரவில் மின்மினிப் பூச்சியைப் போல் ஒளிரும் இந்த காளான் விசித்திரமான காளான் அல்ல, அரிய வகை காளான் தான்.
கோவாவில் அரிதான காளான் காணப்படுகிறது
இந்த அரிய காளான் பயோ-லுமினிசென்ட் (Bio Luminiscent) என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஒளியை வெளிப்படுத்தும் இந்த தனித்துவமான காளான் கோவாவில் (Goa) உள்ள காடுகளில் காணப்படுகிறது. கோவாவின் மதேய் வனவிலங்கு சரணாலயத்தில் (Mhadei Wildlife Sanctuary) இந்த அரியவகைக் காளான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடம் மோலெம் தேசிய பூங்கா அல்லது மகாவீர் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது.
இரவின் இருட்டில், வெளிர் நீலம், பச்சை மற்றும் ஊதா நிற நிறங்களில் ஒளிர்கிறது இந்தக் காளான். இது பகலில் ஒரு பொதுவான காளான் போல தோற்றமளிக்கிறது, ஆனால் இரவில் நட்சத்திரம் போல் ஒளிரத் தொடங்குகிறது. வனவிலங்கு நிபுணர்கள் இந்த இனக் காளானை மைசேனா ஜீனஸ் (Mysena Genus) என்று அழைக்கின்றனர்.
இந்த காளான்கள் மழைக்காலங்களில் மட்டுமே ஒளிர்கின்றன. விஞ்ஞானிகள் இதுவரை 50 வகையான ஒளிரும் காளான்களின் விவரங்களை கண்டறிந்துள்ளனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR