ஸ்மார்ட்போனோ சாதா போனோ, சுத்தம் செய்யறதை ஸ்மார்ட்டா செய்யுங்க! க்ளீனிங் டிப்ஸ்!
Smartphone Cleaning Tips: உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது தவறுதலாக கூட இவற்றை பயன்படுத்தாதீர்கள், உங்கள் மொபைல் போன் பாழாகிவிடும்...
ஸ்மார்ட்போன் மட்டுமல்ல, நாம் சாதா போன்களையும் தொடர்ந்து பயன்படுத்துகிறோம். தொடர்ச்சியான பயன்பாட்டினால், போன்கள் அழுக்காகிவிடும். ஸ்மார்ட்போனை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஆனால் அதை சரியாக சுத்தம் செய்யாவிட்டாலும், தவறாக சுத்தம் செய்தாலும் ஸ்மார்ட்போன் வீணாகிவிடும். போனை சேதப்படுத்தும் வழிமுறைகளை நாம் ஏன் கையாளவேண்டும்? ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது எந்தெந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ஸ்மார்ட்ஃபோனை எவ்வாறு சுத்தம் செய்வது?
ஸ்மார்ட்போன் என்பது ஒரு நாளின் பெரும்பாலான சமயம் நம் கையில் இருக்கும், நாம் அதிகம் பயன்படுத்தும் சாதனம் ஆகும். இணையத்தில் உலாவுவது, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது, ரீசார்ஜ் செய்வது, மின்சாரக் கட்டணம் செலுத்துவது அல்லது திரைப்படம் பார்ப்பது, சீரீயல் பார்ப்பது என எல்லா பணிகளுக்கும் போனை பயன்படுத்துகிறோம்.
தொடர்ந்து பயன்படுத்துவதால் போனும் அழுக்காகிவிடும். எனவே, உங்கள் ஸ்மார்ட்போனை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமானது, ஆனால் அதை தவறாக சுத்தம் செய்வது உங்கள் போனை விரைவில் சேதப்படுத்தும். ஸ்மார்ட்போனை சுத்தம் செய்யும் போது எந்தெந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
திரவ சோப்பு/துப்புரவு இரசாயனம்
திரவ சோப்பு மற்றும் இரசாயனங்கள் உங்கள் ஸ்மார்ட்போனின் திரையை கெடுக்கும் என்பதுடன், போனின் மற்ற பாகங்களையும் சேதப்படுத்தும். போனி சுத்தம் செய்ய சாதாரண தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்
பருத்தி/காட்டன் துணி
துணியால் சுத்தம் செய்வதால், திரையில் கீறல் ஏற்படலாம். அதற்கு பதிலாக, நீங்கள் மைக்ரோஃபைபர் துணி அல்லது லென்ஸ் சுத்தம் செய்யும் துடைப்பான்களைப் பயன்படுத்தலாம்.
கரடுமுரடான மேற்பரப்பு கொண்ட பொருட்கள்
கடற்பாசிகள், தூரிகைகள் அல்லது பல் துலக்கும் பிரஷ் போன்ற கரடுமுரடான மேற்பரப்புகளைக் கொண்ட பொருள்களை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை சுத்தம் செய்தால், போனில் கீறல் விழும்.
ஏர் கம்ப்ரஸர்
ஏர் கம்ப்ரஸரில் இருந்து வெளிவரும் காற்று மிகவும் வலிமையானது, அது தூசித் துகள்களை தொலைபேசியின் உள்ளே ஆழமாகத் தள்ளும். உங்கள் வாயால் ஊதவும் அல்லது மென்மையான தூரிகையைப் பயன்படுத்தி தூசியை மெதுவாக நீக்கவும்.
ஸ்மார்ட்போனை சுத்தம் செய்வதற்கான சரியான வழி
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு தான் சுத்தம் செய்யவேண்டும். தவறுதலாக எந்த பட்டனையும் அழுத்தாமல் இருப்பதற்கு இது உதவும். மைக்ரோஃபைபர் துணியை லேசாக ஈரப்படுத்தவும். ஆனால், தண்ணீர் அதிகம் பயன்படுத்தக் கூடாது. ஈரமான துணியால் திரையை மெதுவாகத் துடைக்கவும். வட்ட இயக்கத்தில் திரையைத் துடைக்கவும், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.
பொத்தான்கள் மற்றும் போர்ட்களை சுத்தம் செய்ய மென்மையான பிரஷ்ஷை பயன்படுத்தவும். பின்னர் தொலைபேசியை முழுமையாக உலர வைக்கவும். நீர் அடையாளங்களை அகற்ற உலர்ந்த மைக்ரோஃபைபர் துணியால் துடைக்கவும்.
மேலும் படிக்க | புதிய சிம் கார்டு விதிகள்... பயனர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ