சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருந்து நீங்கள் பதிவிட்ட வீடியோக்கள் அல்லது புகைப்படங்களையோ, மற்றவர் பதிவிட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களையோ சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் டவுன்லோடு செய்யமுடியும்.  மொபைல் மற்றும் டெஸ்கடாப்பில் எவ்வாறு டவுன்லோடு செய்யலாம் என்பதை பின்வருமாறு காண்போம்.  டெஸ்க்டாப்பில், instagram.com க்கு சென்ற பின், மேல் வலதுபுறத்தில் உள்ள உங்கள் அவதார் ஐகானைக் கிளிக் செய்து, செட்டிங்ஸ் > செக்யூரிட்டி > டவுன்லோட் டேட்டா இணைப்பைக் கிளிக் செய்யவும்.  மொபைலில், இவை சற்று வித்தியாசமாக இருக்கும். உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று கீழ் வலதுபுறத்தில் உள்ள ஐகான் தேர்ந்தெடுத்து, பின்னர் மேல் வலதுபுறத்தில் உள்ள 3 டாட் மெனுவைக் கிளிக் செய்து  செட்டிங்ஸ் > செக்யூரிட்டி > டவுன்லோட் டேட்டா க்ளிக் செய்யவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வாட்ஸ்அப்பில் Font டிசைன்களை மாற்றுவது எப்படி?


இதனை செய்தபின் உங்கள் தகவலின் நகலைப் பெறுங்கள் என்ற பக்கம் தோன்றும்.  டெஸ்க்டாப்பில், இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும், ஒன்று இதை HTML வடிவத்தில் பதிவிறக்கலாம் அல்லது பிற சேவைகளில்  JSON ஃபைலாக பெறலாம் என்று இருக்கும்.  இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நெக்ஸ்டை கிளிக் செய்யவும்.  அதில் உங்கள் இன்ஸ்டாகிராம் பாஸ்வேர்டை மீண்டும் உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யுங்கள் என்று காமிக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.



ஆனால் மொபைலில் உங்களால் இதுபோன்று தேர்வு செய்ய முடியாது, ரிக்வஸ்ட் டவுன்லோடு என்பதை தான் கிளிக் செய்யவேண்டும்.  இவற்றை நீங்கள் முழுமையாக பெற குறைந்தபட்சம் 48 மணி நேரம் ஆகலாம்.  ஏனெனில் உங்கள் அக்கவுண்டில் நிறைய டேட்டாக்கள் சேமிக்கப்பட்டிருந்தால்  டவுன்லோட் ஆக நீண்ட நேரம் ஆகலாம்.  டெஸ்க்டாப்பில் பதிவிறக்க பாஸ்வேர்டை என்டர் செய்தபின் நீங்கள் மீண்டும் Instagram.com க்குள் நுழைவீர்கள்.  டேட்டாவை எடுத்தபின் உங்களுக்கு HTML வெர்ஷன் கிடைத்திருந்தால் index.html ஃபைலை கிளிக் செய்யவும். இது கமெண்டுகள், கான்டெக்டுகள், அக்கவுண்டு தகவல் மற்றும் பலவற்றை உள்ளடக்கும்.  முக்கியமான விஷயங்களுக்கு, போஸ்டுகள், புகைப்படங்கள் மற்றும் ஸ்டோரிகளை கண்டறிய கீழே ஸ்க்ரோல் செய்யவேண்டும்.  நிஜ வீடியோ மற்றும் படங்கள் தேவைப்பட்டால், மீடியா பகுதியில் உள்ள டவுன்லோடு ஆப்ஷனில் பார்க்கவும்.



இன்ஸ்டாகிராமில் இருந்து மற்றவர்களின் வீடியோ மற்றும் படங்களைப் சேமிப்பது எளிதானதல்ல.  டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்தால் பிடித்தவற்றை சேமிக்க  முடியாது.  Toolzu மூலம் இன்ஸ்டாகிராம் கன்டென்டை சேமிக்கலாம்.  இது ஒரு நபரின் படம், வீடியோக்கள், புகைப்படங்கள், ஸ்டோரிகள் அல்லது ஐஜிடிவி-ல் வீடியோக்களைப் பதிவிறக்க அனுமதிக்கும்.  ஆனால் இவை ரீல்ஸை டவுன்லோடு செய்யாது.  இருப்பினும், Toolzu-ல் சுயவிவர டவுன்லோடை பயன்படுத்தினால், இன்ஸ்டாகிராம் பயனரின் பெயரை உள்ளிட வேண்டும், இது புகைபடங்களுக்கான JPG அல்லது வீடியோக்களுக்கான MP4 ஆக எளிதாக டவுன்லோடு செய்யலாம்.  இன்ஸ்டாகிராம்லிருந்து ஒரு குறிப்பிட்ட லிங்கை பெறுவது எப்போதும் எளிதான விஷயமல்ல.  டெஸ்க்டாப்பில் இருக்கும்போது , ​​ஒரு லிங்கை காப்பி செய்ய வலது கிளிக் செய்யலாம்.



மேலும் படிக்க | இன்ஸ்டாவில் இரண்டு புகைப்படத்தை ஒரே நேரத்தில் நீக்குவது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR