சென்ட்ரல் எகியூபிக்மென்ட் ஐடென்டிட்டி ரிஜிஸ்டரி (சிஇஐஆர்) என்கிற தரவுத்தளத்தை போலி மொபைல் போன் சந்தையைக் குறைப்பதற்கான சென்ட்ரல் அமைப்பு மற்றும் தொலைத்தொடர்புத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.  இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள மக்கள் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.  யாரேனும் தங்கள் ஸ்மார்ட்போன்களை தொலைத்துவிட்டால் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.  சிஇஐஆர் முதன்முதலில் செப்டம்பர் 2019-ம் ஆண்டில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, கோவா மற்றும் மகாராஷ்டிராவில் இந்த தளத்தை தொடங்கியது. பின்னர் அரசாங்கம் டிசம்பர் 2019-ல் இந்த சேவையை டெல்லியில் விரிவுபடுத்தியது, கொரோனா பரவல் காரணமாக இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்த சேவை விரிவுபடுத்துவதில் தாமதமானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: iPhone 15: அதிகரிக்கிறதா விலை? கசிந்த தகவலால் அதிர்ச்சியில் பயனர்கள்



சிஇஐஆர்-ஐ பயன்படுத்த, பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் வேண்டும் அல்லது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-க்கான சிஇஐஆர் செயலியையும் பதிவிறக்கி கொள்ளலாம்.  பயனர்கள் தங்கள் மொபைலின் IMEI எண்ணை இதில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும், இதைப் பயன்படுத்துவது இலவசம்.  IMEI எண் இல்லையென்றால் உங்கள் மொபைலில் *#06# டயல் செய்யலாம்.  சிஇஐஆர் அனைத்து மொபைல் ஆபரேட்டர்களின் IMEIகளுடன் இணைக்கிறது.  அரசாங்கம் மொபைல் பிராண்டுகள் மற்றும் நெட்வொர்க் ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்படுகிறது.  சிஇஐஆர் ஆனது IMEI எண் மூலம் மொபைலை பிளாக் செய்கிறது, மொபைலில் சிம் கார்டை மாற்றினாலும் மொபைல் செயல்படாது.


சிஇஐஆர் செயல்பட வேண்டுமானால் பயனர்கள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்ய வேண்டும்.  அதனைத்தொடர்ந்து இணையதளம் மற்றும் செயலியில் கிடைக்கும் ஆன்லைன் படிவத்தை நிரப்பவேண்டும், படிவத்தில் மொபைல் எண், மொபைல் மாடல், IMEI 1 மற்றும் 2 எண்கள் மற்றும் லொக்கேஷன் போன்றவற்றை உள்ளிட விடும்.  மேலும் சிஇஐஆர் தளத்தில்  FIR-ன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலையும் சமர்ப்பிக்க வேண்டும்.  பிளாக்கிங் ரிக்வஸ்ட் வெற்றிகரமாக ஏற்கப்பட்டதும், பயனரின் தொலைபேசி 24 மணி நேரத்திற்குள் பிளாக் செய்யப்படும்.  மொபைல் பிளாக் செய்யப்பட்ட பிறகு, இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அதைப் பயன்படுத்த முடியாது.


மேலும் படிக்க: Lava Blaze 2: சீன ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட வரும் மலிவு விலை இந்திய ஸ்மார்ட்போன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ