Realme Budget Smartphone In India: இன்று இந்தியாவில் ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபோனின் மாடல் Realme C55 ஆகும். மேலும் இது நிறுவனத்தின் மற்ற C-சீரிஸ் ஸ்மார்ட்போன்களான Realme C33 2023, Realme C33 மற்றும் Realme C30s போன்றவற்றுடன் இணைகிறது. இந்தியாவில் ரியல்மீ நிறுவனத்தால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களான Realme 10, Poco M5 மற்றும் Redmi 11 Prime 5G போன்ற போனின் வரிசையில் புதிதாக இந்த ரியல்மி சி55 மாடலும் இணைந்துள்ளது. மினி கேப்சூல் (Mini Capsule) என்கிற புத்தம் புதிய அம்சத்துடன் ரியல்மி சி55 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மினி கேப்சூல் என்றால் என்ன?
இந்த மினி கேப்சூல் தினசரி படிகள், பேட்டரி அளவுகள், சார்ஜிங் அளவுகள் மற்றும் தினசரி டேட்டா பயன்பாடு போன்ற பல்வேறு தகவல்களைக் காட்டுகிறது. அதாவது டைனமிக் ஐலேண்ட் போல, லோ பேட்டரி அலெர்ட், டேட்டா அலெர்ட், இன்கம்மிங் கால்ஸ், பிளே ஆகிக்கொண்டிருக்கும் மியூசிக் உட்பட பல்வேறு வகையான பேக்கிரவுண்ட் வேலைகளை பற்றிய நோட்டிஃபிக்கேஷன்களை, டிஸ்பிளேவின் மேல்பகுதியில் காட்சிப்படுத்தும் ஒரு அம்சமாகும். இதேபோன்ற ஒரு அம்சம் ரியல்மி சி55 போனிலும் உள்ளது.
மேலும் படிக்க: Lava Blaze 2: சீன ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட வரும் மலிவு விலை இந்திய ஸ்மார்ட்போன்
ரியல்மி சி55 மாடலின் விலை:
Realme C55 இந்தியாவில் மூன்று வகைகளில் வருகிறது. அடிப்படை வேரியண்ட் மாடலான 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபியுடன் வருகிறது. இதன் விலை ரூ.10,999 ஆகும். மற்றொரு ஆப்னான 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மாடல் விலை ரூ.11,999 ஆகும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய டாப் வேரியண்டின் மாடலின் விலை ரூ.13,999 ஆகும்.
ரியல்மி சி55 போனின் விற்பனை எப்பொழுது?
இந்த போனை வாங்க வேண்டும் என நினைத்தால் மார்ச் 21 முதல் மார்ச் 27 வரை பிளிப்கார்ட்டில் முன்கூட்டிய ஆர்டர் செய்யுங்கள். ரியல்மி சி55 போனின் விற்பனை மார்ச் 28 அன்று மதியம் 12 மணி முதல் Realme.com, Flipkart மற்றும் ஆஃப்லைன் கடைகள் வழியாகவும் வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க: சாட்ஜிபிடி பிளஸ் இந்தியாவுக்கு வந்தாச்சு..! அணுகலை பெறுவது எப்படி?
ரியல்மி சி55 போன் சலுகை மற்றும் தள்ளுபடி:
இந்த போனை வாங்கும் போது சலுகையின் ஒரு பகுதியாக, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 1,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடியை Realme வழங்குகிறது. அதேபோல எக்ஸ்சேஞ்சில் ரூ.1,000 தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகிறது
ரியல்மி சி55 போன் அம்சங்கள்:
ரியல்மி சி55 மாடல் சன்ஷோவர் மற்றும் ரெய்னி நைட் என இரண்டு கலர்களில் வெளியாகவுள்ளது. இது வெறும் 7.89மிமீ மட்டும் கொண்ட மெலிதான சாதனமாகும். இதுவரை வெளியான சி-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் மெலிதான சாதனங்களில் ஒன்றாக ரியல்மி சி55 மாடல் இருக்கிறது என ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.
1080 x 2400 தெளிவுத்திறன் கொண்ட 6.72 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 91.4 ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் பஞ்ச்-ஹோல் டிசைனுடன் இந்த போன் வருகிறது. இது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிஸ்டம்-ஆன்-சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸை அடிப்படையாகக் கொண்ட Realme UI 4.0-ஐ இயக்குகிறது.
மேலும் படிக்க: 5ஜி மொபைல் வச்சு இருக்கீங்களா? ஏர்டெல் வழங்கும் இலவச 5ஜி டேட்டா!
ரியல்மி சி55 ஆனது 1/2-inch இமேஜ் பிரைமரி சென்சார் கொண்ட 64MP லென்ஸைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறைந்த-ஒளி நிலைகளில் சிறந்த படங்களுக்கான ப்ரோலைட் இமேஜிங் தொழில்நுட்பம், பொக்கே பயன்முறை, டிஜிட்டல் இமேஜ் ஸ்டெபாலைசேஷன் ஸ்னாப்ஷாட் பயன்முறை மற்றும் AI வண்ண உருவப்படம் பயன்முறை ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை 5,000mAh பேட்டரி திறன் கொண்ட 33W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜரால் ஆதரிக்கப்படுகிறது. இது சுமார் 29 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்கிறது.
மேலும் படிக்க: iPhone 15: அதிகரிக்கிறதா விலை? கசிந்த தகவலால் அதிர்ச்சியில் பயனர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ