பாஸ்போர்ட்டை சீக்கிரம் வாங்கணுமா... ஆன்லைனில் இதை படிப்படியாக செய்யுங்க!
Tatkal Passport: உங்களுக்கு பாஸ்ப்போர்ட்டை அவசரமாக வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஆன்லைனில் இந்த வழிமுறைகளை படிப்படியாக செய்து விரைவாக வாங்கலாம்.
How To Apply For Tatkal Passport: எந்தவொரு நாட்டைச் சேர்ந்த குடிமகனும் வெளிநாடு செல்வதற்கு தேவையான முக்கியமான ஆவணங்களில் ஒன்று பாஸ்போர்ட் ஆகும். அந்த வகையில், இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவதும் முதலில் மிக கடினமான ஒன்றாக இருந்தது. இப்போது அதன் நடைமுறைகள் எளிதாகி உள்ளன. மேலும் சில சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரருக்கு பாஸ்போர்ட் அவசரமாக தேவைப்படலாம். அத்தகைய சந்தர்ப்பங்களில், 'அவசர பாஸ்போர்ட்' என்ற சேவைக்கு விண்ணப்பிக்கும் விதிமுறை இங்கு உள்ளது.
தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், அதை மிக விரைவாக செய்து முடிக்க முடியும். மேலும், அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறை சாதாரண பாஸ்போர்ட்டை பெற உள்ளதை போலவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படி விண்ணப்பிப்பது?
தட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பாஸ்போர்ட் சேவா இணையதளம் (Passport Seva Portal) மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஆவண சரிபார்ப்புக்காக தனிப்பட்ட நேர்காணலில் (Personal Interview) கலந்து கொள்ள வேண்டும். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பாஸ்போர்டுக்கு ஒப்புதல் கிடைத்த உடன் விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் ஒரு நாளுக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் சுற்றும் ‘அந்த’ 3 பேர்..! யார் யார் தெரியுமா..?
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை
- பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் உள்நுழைந்து, 'Apply For New Passport' என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உடனடி பயன்முறையை (Immediate Mode) தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் ஆன்லைனில் சரியாக நிரப்பவும்.
- பதிவேற்றம் முடிந்ததும், பாஸ்போர்ட் சேவா மையத்தில் (PSK) தனிப்பட்ட நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்ய, "Pay and Schedule Appointment" என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பகுதியில் உள்ள சரியான பாஸ்போர்ட் சேவா மைய இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சேவா மையத்தில் உங்கள் விருப்பமான சந்திப்பு தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த பிறகு, நீங்கள் ஆன்லைன் கட்டணப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
- கட்டணம் செலுத்தி முடிந்ததும், விண்ணப்பக் குறிப்பு எண் (ARN) அல்லது அப்பாயிண்ட்மென்ட் எண் அடங்கிய விண்ணப்ப ரசீதை நீங்கள் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.
- இப்போது நீங்கள் பாஸ்போர்ட் சேவா மையத்திற்கு (PSK) உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கப்பட்ட சரியான தேதி மற்றும் நேரத்தில் செல்ல வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று, புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று, வசிப்பிடச் சான்று மற்றும் குடியுரிமைச் சான்று போன்ற அசல் ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கையில் வைத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேலும் படிக்க | புதிய பாஸ்போர்ட் எடுக்கும் விதிகளில் மாற்றம்: இனி எளிதாக பெற்றுக்கொள்ளலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ