வாட்ஸ்அப் நமது வாழ்வோடு பின்னிப்பிணைந்துவிட்ட ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். வாட்ஸ்அப் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்புவதற்கான பாதுகாப்பான வழியாக இருந்தாலும், உங்களுக்குத் தெரியாமல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்படலாம். பெரும்பாலும், ஹேக்கர்கள் உங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்ய, சமூக ஹேக்கிங் முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில நடவடிக்கைகள் மூலம் பயனர்கள் இதைத் தவிர்க்க முடியும். உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்களிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹேக்கிங்கிலிருந்து வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது


உங்கள் வாட்ஸ்அப் கணக்கைப் பாதுகாக்க ஒரு ஸ்டெப் அல்லது அல்லது ஒற்றை செயல்முறை என எதுவும் இல்லை. உங்கள் தனியுரிமையைப் பற்றி (ப்ரைவசி) கவனமாக இருப்பது சிறந்த நடவடிக்கையாக இருக்கும். மேலும் அந்நியர்கள் கையில் உங்கள் தனிப்பட்ட சேட்கள் செல்லும்படி விட்டுவிடாதீர்கள். உங்கள் வாட்ஸ்அப்பை அனைத்து வகையிலும் ஹேக்கிங்கிலிருந்து பாதுகாக்க நீங்கள் எடுக்க வேண்டிய மிகவும் பயனுள்ள செயல்முறைகள் பற்றி இங்கே காணலாம். 


1. டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை ஆக்டிவேட் செய்யவும்


டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை, அதாவது 2FA, ஆன்லைனில் அனைத்து கணக்குகளையும் பாதுகாப்பதற்கான முதன்மை செயல்முறையாகும். நீங்கள் இதை ஏற்கனவே செய்திருக்கவில்லை என்றால், உடனடியாக செய்து கூகிள் ஐடி மற்றும் ஆப்பிள் ஐடி -ஐப் பாதுகாக்கவும். இப்போது, WhatsApp கணக்கில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை எவ்வாறு இயக்குவது என்பதை இங்கே காணலாம். 



2. வாட்ஸ்அப்பை ஸ்க்ரீன் லாக் செய்யவும்


வேலை செய்யும் இடத்தில் அல்லது எங்காவது உங்கள் மொபைலை அப்படியே வைத்துவிட்டு செல்லும் பழக்கம்  இருந்தால், உங்களுக்குத் தெரியாமல் மற்றவர்கள் உங்கள் வாட்ஸ்அப்பை எளிதாகப் பார்க்க முடியும். வாட்ஸ்அப்பை ஸ்க்ரீன் லாக்செய்தால் இதை தவிர்க்கலாம். இதை செய்தால், வாய்ட்ஸ்அப்பை திறக்கும்போது ஸ்க்ரீன் லாக் பாஸ்வர்ட் கேட்கப்படும். 


உங்கள் ஃபேஸ் ஐடி அல்லது டச் டச் ஐடி/கைரேகையைப் பயன்படுத்தி ஸ்க்ரீன் லாக்கை இயக்கி வாட்ஸ்அப்பைத் திறக்கலாம். இந்த வகையில் இதை செய்யலாம்.



3. அங்கீகரிக்கப்படாத வாட்ஸ்அப் வெப் லாகினை செக் செய்யவும் 


உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் மொபைலை அணுகினால், அவர்கள் தங்கள் கணினியில் உள்ள வாட்ஸ்அப் இணையத்துடன் இணைப்பதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப்பை எளிதாக ஹேக் செய்யலாம். உங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி எவரும் ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்து அனைத்து சேட்களையும் தங்கள் கணினியில் பெறலாம். எனவே இணைய உள்நுழைவு மூலம் உங்கள் வாட்ஸ்அப்பை யாரும் அணுகவில்லை என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.


4. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனைச் சரிபார்க்கவும்


வாட்ஸ்அப் சேட்கள் எப்போதும் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டவை. அதாவது உங்கள் நண்பருக்கு நீங்கள் அனுப்பும் எந்த செய்தியும் அல்லது உரையும் உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் மட்டுமே தெரியும். இணையத்தில் அனுப்பப்படும் போது செய்தி ரகசிய குறியீட்டில் குறியாக்கம் செய்யப்படும். இது மற்றவரின் ஃபோனில் டிக்ரிப்ட் செய்யப்படும். அவர்களால் மட்டுமே செய்திகளைப் படிக்க முடியும்.


மேலும் படிக்க | ’இலவச இணையம்' ஹேக்கர்களின் பொறியில் சிக்கிவிடாதீர்கள் மக்களே..!


5. உங்கள் போன் திருடப்பட்டால் வாட்ஸ்அப் கணக்கை செயலிழக்கச் செய்யுங்கள்


உங்கள் தொலைபேசி திருடப்பட்டால் என்ன செய்வது? உங்களிடம் ஆண்ட்ராய்டு ஃபோன் இருந்தால், உங்கள் போனைப் பறித்தவர் சில நுட்பங்களைப் பயன்படுத்தி அதைத் திறக்கலாம். உங்கள் தரவு கசியலாம். அதனால் உங்கள் வாட்ஸ்அப்பை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தலாம். இதைத் தவிர்ப்பதற்கான சிறந்த அணுகுமுறை உங்கள் வாட்ஸ்அப் திருடப்பட்ட தருணத்தில், உடனே அதை செயலிழக்கச் செய்வதாகும்.


6. சந்தேகத்திற்கிடமான சேட்களைப் பற்றி புகாரளிக்கவும்


தெரியாத எண்களில் இருந்து மிரட்டும் செய்திகள் மற்றும் விசித்திரமான குறுஞ்செய்திகள் வருகின்றனவா? சந்தேகத்திற்கிடமான எண்களில் இருந்து இதுபோன்ற தேவையற்ற செய்திகளை பலர் தொடர்ந்து பெறுகிறார்கள். இது பெரும்பாலும் சமூக ஹேக்கிங் மற்றும் தனியுரிமை இழப்புக்கு வழிவகுக்கிறது. இதைத் தடுக்க, இப்படிப்பட்ட எண்களை பற்றி புகாரளிக்க WhatsApp உங்களை அனுமதிக்கிறது.


7. தனியுரிமை அமைப்புகளில் மிகவும் கவனமாக இருங்கள்


வாட்ஸ்அப்பில் சில தனியுரிமை விருப்பங்கள் (ப்ரைவசி செட்டிங்) உள்ளன. இது வாட்ஸ்அப்பில் உங்கள் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய உதவுகிறது. இதில் உங்கள் ப்ரொஃபைல் போட்டோவை யார் பார்க்க்லாம், உங்கள் சுய விவரங்களை யார் பார்க்கலாம், ஸ்டேடஸை யார் பார்க்கலாம் என்பதை கவனமாக தேர்வு செய்யுங்கள். 


8. உங்களைக் குழுக்களில் யார் சேர்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்தவும்


வாட்ஸ்அப்பில் உள்ள ஒரு ஆப்ஷன், நீங்கள் விருப்பமில்லாத குழுக்களில் சேர்ப்பதைத் தடுக்க உங்களை அனுமதிக்கிறது. பொதுவாக, இது இயல்பாக (டீஃபால்டாக) ஆஃப் ஆக இருக்கும். இதனால் யார் வேண்டுமானாலும் உங்களை WhatsApp குழுவில் சேர்க்கலாம். சில ஃபிஷிங் இணைப்புகளைக் கிளிக் செய்ய அவர்கள் முயற்சிப்பதால் இது ஆபத்தானது.


9. புளூடிக்கை மற்றவர்களிடமிருந்து மறைக்கவும்


உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைப் பற்றி யாராவது உங்களுக்கு செய்தி அனுப்பினால், நீங்கள் அவற்றைத் தவிர்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முறை செய்திகளைப் படித்துவிட்டால், உங்கள் வாட்ஸ்அப் சேட்டில் வரும் "ப்ளூ டிக்" மூலம், நீங்கள் ஏற்கனவே செய்தியை படித்துவிட்டதை அவர்கள் அறிவார்கள். இதுபோன்ற சேட்களைத் தவிர்க்க, நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்து இந்த "ப்ளூ டிக்" ஐ முடக்கினால், நீங்கள் செய்திகளைப் படிக்கிறீர்களா அல்லது புறக்கணிக்கிறீர்களா என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.


10. வாட்ஸ்அப்பில் ‘டிஸ்அப்பியரிங்’ புகைப்படங்களை அனுப்பவும்


நீங்கள் ஒருவருக்கு ஒரு மீடியா ஃபைலை அனுப்பி, அவர் அதை சேமிக்க, அதாவது சேவ் செய்ய வேண்டாம் என நினைத்தால், அதற்கு டிஸ்அப்பியரிங் போட்டோ அல்லது செல்ஃப் டிஸ்ட்ரக்டிங் போட்டோவாக அதை அனுப்பலாம். இப்படி செய்தால், அந்த நபர் போட்டோவை பார்த்த உடனேயே அந்த போட்டோ தானாக டெலீட் ஆகி விடும். 


11. வாட்ஸ்அப்பில் ‘டிஸ்அப்பியரிங்’ செய்திகளை அனுப்பவும்


நீங்கள் உடனடியாக மறைந்து போகும் புகைப்படங்களை அனுப்புவது போல், மறைந்து போகும் செய்தியிடல் விருப்பமும் உள்ளது. புகைப்படங்களைப் போலன்றி, மறைந்து போகும் செய்திகள் மற்றவர் பார்த்த உடனே மறைந்துவிடாது. அனைத்து சாதனங்களிலிருந்தும் 7 நாட்களுக்கு மேல் பழைய செய்திகளை டெலீட் செய்வதன் மூலம் இது செயல்படுகிறது.


12. நேரலை இருப்பிடப் பகிர்வை (லைவ் லொகேஷன் ஷேரிங்) செக் செய்யவும்


உங்கள் நிகழ்நேர இருப்பிட விவரங்களை ஒரு காண்டேக்டுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும் ஒரு நேரடி இருப்பிட அம்சம் (லைவ் லொகேஷன் பீசர்) வாட்ஸ்அப்பில் உள்ளது. உங்கள் ஃபோன் லாக் கடவுக்குறியீட்டை அறிந்த ஒருவருக்கு இது ஒரு நல்ல உளவு கருவியாக மாறிவிடும். அவர்கள் உங்கள் வாட்ஸ்அப்பிலிருந்து நேரலை இருப்பிடத்தை அவர்களின் எண்ணுக்குப் பகிரலாம். இதன் மூலம் அவர்கள் உங்கள் நகர்வுகளை அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க முடியும். 


மேலும் படிக்க | சாட்ஜிபிடி உருவாக்கப்போகும் ஆபத்தை என்னால் யூகிக்க முடியவில்லை: சாம் ஆல்ட்மேன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ