தினசரி ஸ்பேம் கால்கள் அதிகம் வருகிறதா? உடனே இத பண்ணுங்க!
DND பட்டியலில் சேர்த்த பிறகும் 60% இந்தியர்கள் ஒவ்வொரு நாளும் 3 க்கும் மேற்பட்ட ஸ்பேம் கால்களை பெறுகிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள 60%க்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக மூன்று முதல் அதற்கு மேற்பட்ட பல ஸ்பேம் கால்களை பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான ஒரு சர்வே நாடு முழுவதும் 378 மாவட்டங்களைச் சேர்ந்த 60,000 பேரிடம் எடுக்கப்பட்டது. இதில் 30% பேர் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு ஸ்பேம் கால்களை பெறுகிறார்கள் என்று சர்வேயில் தெரிய வந்துள்ளது. மேலும் இதன் மூலம், கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 60%க்கும் அதிகமான மக்கள் தினசரி சராசரியாக மூன்று அல்லது அதற்கு அதிகமான தேவையில்லாத ஸ்பேம் கால்களை பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்
30% பேர் தினசரி சராசரியாக ஒன்று அல்லது இரண்டு ஸ்பேம் கால்களை பெறுவதாகவும், 36% பேர் தினசரி குறைந்தது மூன்று முதல், ஐந்து ஸ்பேம் கால்களை பெறுவதாகவும் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், 21% பேர் ஒவ்வொரு நாளும் 6 முதல் 10 தேவையில்லாத ஸ்பேம் கால்களை பெறுவதாகவும், 3% பேர் 10 க்கும் மேற்பட்ட தேவையில்லாத ஸ்பேம் கால்களை பெறுவதாகவும் இந்த சர்வே மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, இதில் 6% மக்கள் அத்தகைய ஸ்பேம் கால்களால் எந்த வித பிரச்சனைகளையும் சந்திக்கவில்லை என்று கூறியுள்ளனர்.
ஸ்பேம் கால்கள்
கடந்த ஆண்டு இதே போல நடத்தப்பட்ட ஒரு சர்வேயில், தினசரி குறைந்தது 3 பயனற்ற ஸ்பேம் கால்களை பெறுபவர்களின் எண்ணிக்கைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில், மொத்தம் 66% பேர் தினமும் 3க்கும் மேற்பட்ட ஸ்பேம் கால்களை பெற்றனர், ஆனால் இப்போது கடந்த 12 மாதங்களில் இது 30% ஆகக் குறைந்துள்ளது என்று சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ஸ்பேம் கால்களின் எண்ணிக்கை குறைய தொடங்கினாலும் இன்னும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. எண்ணிக்கை குறைவது நல்ல செய்தி தான் என்றாலும், தொலைத்தொடர்பு துறையின் விதிகளை முறையாக அமல்படுத்தினால், இந்த ஸ்பேம் கால்களின் பிரச்சனை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 90% பேர், தொந்தரவு செய்ய வேண்டாம் (DND) ஆப்ஷனை வைத்து இருந்தாலும், இந்த தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் வருவதாக குற்றம் சாட்டி உள்ளனர். அதேசமயம் சர்வேயின் முடியில் 5% பேருக்கு இதுபோன்ற எந்த வித அழைப்புகளும் வருவதில்லை என்று தெரிய வந்துள்ளது. சர்வேயின்படி, 76% பேர் தங்களுக்கு வரும் ஸ்பேம் கால்கள் பெரும்பாலானவை நிதி நிறுவனங்கள் மற்றும் சொத்து விற்பனை நிறுவனங்களிலிருந்து வருவதாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில், 48% மக்கள் தங்களுக்கு வரும் ஸ்பேம் கால்களில் பெரும்பாலானவை மொபைல் எண்ணிலிருந்து வருவதாகக் கூறியுள்ளனர்.
36% மக்கள் சில நிறுவனம் அல்லது பிராண்டின் மொபைல் எண்களிலிருந்து ஸ்பேம் கால்கள் வருவதாக தெரிவித்துள்ளனர். நிறுவனங்களின் பெயரில் லேண்ட்லைன் எண்ணிலிருந்து 7% பேர் ஸ்பேம் கால் தொல்லையில் இருந்து வருகின்றனர். 2% பேர் நிறுவனங்களின் இலவச எண்களில் இருந்து இந்த கால்களை பெறுகின்றனர்.
மேலும் படிக்க | OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ