கூகுள் மேப் வந்தபிறகு போகாத ஊருக்குகூட, யாரிடமும் வழிகேட்காமல் சென்று வந்துவிடலாம். அந்தளவுக்கு பூமிப்பந்தின் மூலைமுடுக்கெல்லாம் கூகுள் மேப்பில் பதிவாகியுள்ளது. ஆனால், அதனை நம்பி ஏமாந்தவர்களும் இங்குண்டு. அப்படியான சம்பவம் தமிழ்நாட்டில் கூட அரங்கேறியுள்ளது. சென்னையில் நெல்லைக்கு சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர் கூகுள் மேப் - ஐ பார்த்துக் கொண்டு சென்று, நெல்லையப்பர் கோவில் காட்சி மண்டபத்தின் வாயிலில் சிக்கிக் கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  புத்தாண்டில் ஷாக் கொடுத்த கார் நிறுவனங்கள்: இந்த கார்களின் விலைகள் அதிகரித்தன


ஏற்கனவே அப்பகுதியில் காவல்துறையினர் போக்குவரத்தை தடை செய்திருந்ததை அறியாத அவர், அந்தப் பகுதியில் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். பொதுமக்கள் கூறியபோதும் அதனை கேட்காமல் இயக்கியதால், இக்கட்டான இடத்தில் லாரி சிக்கிக் கொண்டது. சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகே லாரியை வெளியே எடுத்தனர். இதுபோன்ற அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் தவறுகளுக்காக, முழுமையாக கூகுள் மேப்-ஐ நிராகரித்துவிடலாமா? என்றால், அது தவறு.


சரி, விஷயத்துக்கு வருவோம். இதுநாள் வரை கூகுள் மேப் (Google Map) இன்டர்நெட் இருந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என பலர் நினைத்துக் கொண்டிருந்திருப்பீர்கள். பலரும் கூகுள் மேப்-ஐ அப்படியே பயன்படுத்தியும் இருப்பீர்கள். ஆனால், அதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால், இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் மேப் -ஐ பயன்படுத்தலாம். எப்படி என கேட்கிறீர்களா?


ALSO READ | முந்துங்கள்; iPhone 12 Pro இல் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பு தள்ளுபடி


நீங்கள் போகும் பகுதிக்கான ரூட் மேப்-ஐ இன்டர்நெட் இருக்கும்போதே தேர்வு செய்து கொண்டால், இன்டர்நெட்டை ஆப் செய்தபிறகும் கூகுள் மேப் உங்களுக்கு வழிகாட்டும். அதற்கு முதலில் கூகுள் மேப்புக்கு சென்று, வலது பக்கத்தில் உங்களது புகைப்படத்துக்கு கீழே இருக்கும் ஐகானை கிளிக் செய்யுங்கள். அதில் ஆப்லைன் மேப் எனும் பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது, நீங்கள் செல்ல இருக்கும் இடத்துக்கான மேப்-ஐ இன்டர்நெட் இருக்கும்போதே தேர்ந்தெடுத்து சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது, இன்டர்நெட் இல்லாமல் இருந்தாலும், நீங்கள் செல்லும் பகுதிக்கான வழியை கூகுள் மேப் காட்டும்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR