ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?
அனைத்து ஏடிஎம் மையங்களிலும், ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தவுள்ளது.
வங்கிகளுக்கு சென்று காத்திருந்து பணம் பெறுவதை விட ஏடிஎம் மையங்களுக்கு சென்று பணம் எடுப்பது எளிதானதாக இருப்பதால் பலரும் இந்த நடைமுறையை பின்பற்ற தொடங்கிவிட்டனர். இதனை விட கூடுதலாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு தொழில்நுட்பங்கள் வளர வளர மோசடி குற்றங்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வங்கி ஏடிஎம் மையங்களில் அதிக அளவு மோசடிகள் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. இந்த குற்றங்களை தடுப்பதற்காக தற்போது ரிசர்வ் வங்கி ஒரு செயல்முறையை அறிமுகப்படுத்த இருக்கிறது.
மேலும் படிக்க | இனி எத்தனை சிம் வேணாலும் போட்டுக் கொள்ளலாம்! ஸ்மார்ட்போனில் புதிய புரட்சி!
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தாமல் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி அனைத்து ஏடிஎம் மையங்களிலும் செயல்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் என் சி பி ஐ ஏடிஎம் நெட்வொர்க்குகள் மற்றும் வங்கிகளுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், அனைத்து வங்கிகள் அனைத்து ஏடிஎம் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து ஆப்ரேட்டர்களிலும் ஏடிஎம் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை ஊக்குவிப்பதற்காக இந்த முறை செயல்படுத்தப்பட இருக்கிறது, இதன்மூலம் கார்டுகளில்லாமல் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் முறையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் இனிமேல் ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்கலாம் என்று கூறியுள்ளார். ஏடிஎம் மையங்களில் கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை சில வங்கிகள் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இந்த வசதியை அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மேலும் படிக்க | இன்பாக்ஸில் தேவையில்லாத மெயில்கள் வரமால் தடுப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR