உச்சக்கட்ட குஷியில் ஆப்பிள் வெறியர்கள்... அறிமுகமானது iOS 18 - எந்தெந்த ஐபோன்களுக்கு கிடைக்கும்?
WWDC 2024: ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய iOS 18 Operating System-மை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், அவை எந்தெந்த ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
WWDC 2024 iOS 18 Latest News: ஆப்பிள் நிறுவனத்தின் Worldwide Developers Conference (WWDC) என்ற மாநாட்டிற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் சேவைகளில் வழக்கத்திற்கு வரும் மாற்றங்கள், முன்னேற்றங்கள், அப்டேட்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் தகவல் வெளியாகும். அந்த வகையில், இந்த ஆண்டின் WWDC மாநாட்டின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இருந்தன.
குறிப்பாக, iOS 18 குறித்த அறிவிப்புகள் இந்த WWDC மாநாட்டில் வெளியாகும் என பேச்சுகள் வந்தன. அந்த வகையில் வெளியான தகவல்கள் தற்போது உண்மையாகி உள்ளது. இந்திய நேரப்படி ஜூன் 10ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு இந்த மாநாடு தொடங்கியதில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில், முதல் நாளான நேற்று ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் பயனர்களுக்கு iOS 18 Operating System-ஐ அறிமுகப்படுத்தியது. இதனால், ஐபோன் பயனர்கள் உச்சக் கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றன. இந்த மாநாடு வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நடைபெறும்.
எப்போது iOS 18 கிடைக்கும்?
இருப்பினும், iOS 18 அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் கிடைக்காது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது, சில ஐபோன் மாடல்களில் மட்டுமே இந்த புதிய iOS 18 வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த iOS 18 பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சில லேட்டஸ்ட் அப்டேட்களை காணலாம். வரும் வாரங்களில் எவ்வித பிரச்னையும் இல்லாத பீட்டா வெர்ஷன் வந்துவிடும் எனலாம். இருப்பினும், பொதுமக்களுக்கு வரும் 2024ஆம் செப்டம்பர் மாதமே iOS 18 செயல்பாட்டிற்கு வரும். அப்போதுதான் ஐபோன் 16 சீரிஸ் சந்தையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தண்ணீரில் போட்டாலும் தாக்குப்பிடிக்கும் மொபைல்கள்... மூன்று மாடல்கள் இதோ!
மெருகேற்றப்படும் Siri
இந்த புதிய iOS 18இல் செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதன் Siri அம்சம் மேம்படுத்துப்படும். இருப்பினும், இவை A17 Pro Chip இருக்கும் ஐபோன் அல்லது அதற்கு பின் வந்த லேட்டஸ்ட் ஐபோன்களில் Siri அம்சம் ஏஐ உதவியுடன் மேம்படுத்தும். ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 16 சீரிஸ் ஆகியவை இதில் அடங்கும். இருப்பினும், iOS 18 மற்ற பல ஐபோன்களில் அடங்கும் எனலாம்.
இதன்மூலம், ஹோம் ஸ்கிரீன், லாக் ஸ்கிரீன், கன்ட்ரோல் சென்டர் ஆகியவை முற்றிலும் மாறுபடும். மேலும், வை-பை மற்றும் மொபைல் நெட்வோர்க் எதுவுமில்லாமல் மெசேஜ் அனுப்புவது, மெசேஜை நேரம் செட் செய்து பின்னர் அனுப்புவது போன்ர பல விஷயங்கள் இந்த OS அப்டேட்டில் வரும். அந்த வகையில், எந்தெந்த ஐபோன்களில் இந்த iOS 18 வரும் என்பதை இங்கு காணலாம்.
எந்தெந்த ஐபோன்களுக்கு கிடைக்கும்?
ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ், ஐபோன் XR, ஐபோன் SE (2ஆவது தலைமுறை, அதற்கு பின்னான மாடல்கள்),
ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்,
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ