Hyundai, Kia Motors கார்களில் தீ பற்றும் அபாயம்: இந்த நாடுகளில் கார்கள் திரும்பப்பெறப்பட்டன!!
நீங்கள் Kia Motors அல்லது Hyundai கார்களை வாங்க நினைத்திருந்தால், இந்த செய்தியை நீங்கள் முதலில் படிக்க வேண்டும். இந்த இரண்டு நிறுவனங்களின் வாகனங்களின் சில மாடல்களில் தீ விபத்து ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.
புதுடெல்லி: நீங்கள் Kia Motors அல்லது Hyundai கார்களை வாங்க நினைத்திருந்தால், இந்த செய்தியை நீங்கள் முதலில் படிக்க வேண்டும்.
இந்த இரண்டு நிறுவனங்களின் வாகனங்களின் சில மாடல்களில் தீ விபத்து ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. ஹூண்டாய் மோட்டார் (Hyndai Motors) மற்றும் கியா மோட்டார்ஸ் அமெரிக்கா (America) மற்றும் கனடாவில் (Canada) 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெற்றுள்ளன. அதாவது கார்களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெற்றுள்ளன.
இந்த கார்களில் பிரேக் திரவம் கசிவு (Brake Fluid Leak) குறித்த சிக்கல் உள்ளது. கார் நிறுவனங்களின் கூற்றுப்படி, இந்த சிக்கலால் ஷார்ட் சர்கியூட் ஏற்பட்டு காரில் தீ பற்றக்கூடும். அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) இது குறித்த தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Kia 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் விற்கப்பட்ட SUV Sorento-வையும், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் விற்கப்பட்ட அதன் Sedan Optima-வையும் திரும்பப் பெற்றுள்ளது. Hyndai 2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் விற்கப்பட்ட SUV Santa Fe –ஐ திரும்பப்பெற்றது. இந்த அனைத்து கார்களும் கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ALSO READ: Washing Machine வாங்க போறீங்களா? மலிவான விலையில் Thomson இந்தியாவின் Washing Machines
தீ பற்றிய சம்பங்கள்
திரவ கசிவு காரணமாக 15 இன்ஜின் தீ விபத்துக்கள் ஏற்பட்டதாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாக ஹூண்டாய் கூறியது. அதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது தெரியவில்லை. இதுபோன்ற 8 விபத்துக்கள் நடந்ததாக கியா கூறியது. இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை, காரை வெளியே நிறுத்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் Anti Lock warning Light எரிய ஆரம்பித்தால், அப்போது காரை ஓட்ட வெண்டாம் என்றும், டீலருக்கு இதைத் தெரியபடுத்தி புகார் அளிக்கவும் ஹூண்டாய் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. காரிலிருந்து 12 வோல்ட் பேட்டரியின் பாசிடிவ் கேபிளை எடுத்து தனியாக வைத்து விட வெண்டும்.
இலவசமாக ரிப்பேர் செய்யப்படும்
இரு நிறுவனங்களின் விநியோகஸ்தர்களும் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள கசிவை சரிபார்த்து அதை மாற்றுவர். இதற்காக, வாடிக்கையாளர்கள் எந்த பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.
ஹூண்டாய் இன்ஜின் தீ பற்றிய முதல் புகார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2014 மாடல் சாண்டா ஃபேவில் பெறப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரியில் கியாவுக்கு இதேபோன்ற புகார் 2015 மாடலின் சோரெண்டோவில் கிடைத்தது. பிப்ரவரியில், ஹூண்டாய் சுமார் 430,000 சிறிய கார்களை இது போன்ற பிரச்சனைகளுக்காக திரும்பப் பெற்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், அமெரிக்காவின் NHTSA, ஹூண்டாய் மற்றும் கியாவின் வாகனங்கள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியது. மொத்தம் 3100 வழக்குகள் பற்றி தெரிய வந்தன. இதில் 103 பேர் காயமடைந்திருந்தது தெரிய வந்தது.
ALSO READ: ரெயில் சைக்கிளை அறிமுகம் செய்த இந்தியன் ரயில்வே... சிறப்பு என்ன?...