Hyundai IONIQ6: ஒரு வாரத்தில் அறிமுகமாகிறது ஹூண்டாய் ஸ்போர்ட்ஸ் கார்
Hyundai IONIQ6: ஹூண்டாய் நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய கார், நிறுவனத்தின் கீ என் செயல்திறன் கார்களின் வரிசையில் சேரும்
புதுடெல்லி: ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புதிய காரை கொண்டு வரவுள்ளது. இந்த புதிய அறிமுகம் ஸ்போர்ட்ஸ் கார் என்ற வகைப்பாட்டில் வருமா என்று தெரியவில்லை. ஹூண்டாய் ஐயோனிக் 5 மற்றும் ஐயோனிக் 6 என இரு மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் புதிய ஸ்போர்ட்ஸ் காரை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய கார், நிறுவனத்தின் கீ என் செயல்திறன் கார்களின் வரிசையில் சேரும்.
இது பிராண்டின் வருடாந்திர N தினமான ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய வரவைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஹூண்டாய் என் ஸ்போர்ட்ஸ்கார்
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல் அதன் சமூக ஊடக சேனல்களில் பகிரப்பட்டுள்ளது. இதில், ஹூண்டாய் நிறுவனத்தின் வரவிருக்கும் கார் மங்கலான வெளிச்சத்தில் துணியால் சுற்றப்பட்டிருப்பதைக் காணலாம்.
அதில் காரின் வடிவம் மட்டுமே தெரியும். இதன் சில்ஹவுட், பானட் மற்றும் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் ஆகியவை தெரிகிறது. இந்த மறைக்கப்பட்ட இந்த புதிய கார், தற்போதுள்ள ஹூண்டாய் மாடலில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்பதைக் குறிப்பதால், காரின் தோற்றம் எப்படி இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
Ioniq 5 N, Ioniq 6 N
ஹூண்டாய் சமூக ஊடகங்களில் வெளியிட்ட மற்றொரு படத்தில், புதிய ஹூண்டாய் ஐயோனிக் 6 இன் பின்புறத் தோற்றம் தெரிகிறது. இதில், ஒரு பெரிய ரேஸ்-ஸ்பெக் ரியர் விங் அமைப்பை காணலாம்.
மேலும் படிக்க | ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ
Ioniq 6 இன் புதிய மாறுபாடும் விரைவில் கொண்டு வரப்படலாம் என்று இது உணர்த்துகிறது. தகவல்களின்படி, Ioniq 5 N இதனுடன் அறிமுகமாகும். இந்த கார் எப்போது வெளியிடப்படும் என்று கார் ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஹூண்டாய் ஐயோனிக் 5 என் எலக்ட்ரிக் எஸ்யூவி சோதனை மாடலின் படம் சர்வதேச அளவில் கசிந்துள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்களின் தொகுப்பில் இதைக் காணலாம். தகவல்களின்படி, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி சில மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்துடன் வரும்.
இந்தியாவில் ஹூண்டாய் என் லைன் திட்டம் என்ன?
ஹூண்டாயின் முழு வளர்ச்சியடைந்த N வரிசை இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. ஹூண்டாய் இந்திய சந்தையில் i20 N லைனை விற்பனை செய்கிறது. இதனுடன், ஹூண்டாய் வென்யூ என் லைனையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது.
மேலும் படிக்க | 11 விதமான VENUE ரக கார்களை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR