மொபைல் போன்களுக்கு சார்ஜ் விரைவாக குறைவது மிகப்பெரிய பிரச்சனை. அதிலிருந்து விடுபடுவதற்கு பவர் பேங்குகள் விற்பனைக்கு வந்திருக்கும் நிலையில், விரைவாக சார்ஜ் ஆக வேண்டும் என்பதும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு போன் அதிகபட்சமாக 5 மணி நேரம் 6 மணி நேரம் சார்ஜ் ஆக டைம் எடுத்துக் கொள்ளும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. அரை மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆக வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதற்கேற்றார் போல் மொபைல் நிறுவனங்களும் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் மொபைல் போன்களை மார்க்கெட்டில் களமிறக்கி வருகின்றன. கிட்டத்தட்ட அனைத்து புதிய போன்களும் வேகமான சார்ஜிங்கை வழங்குகின்றன. இதுதவிர சில ஸ்மார்டான டிரிக்ஸூகளைப் பயன்படுத்தியும் போனுக்கு வேகமாக சார்ஜ் செய்யலாம். 


மேலும் படிக்க | Laptop Tips: இதை செய்தால் ஹேக்கர்களுக்கே நீங்கள் சவால் விடலாம்


சுவர் சாக்கெட்டில் சார்ஜர்


சார்ஜ் செய்வதற்கு கணினி அல்லது USB போர்ட்டைப் பயன்படுத்தினால், வேகமாக சார்ஜ் ஆகாது. இதுபோன்ற சூழ்நிலையில், அவசரமாக இருக்கும்போது, ​​​​ஃபோனை வால் சாக்கெட்டில் சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், சார்ஜ் செய்ய அந்த நிறுவனத்தின் சார்ஜரைப் பயன்படுத்தவும்.


போன் சுவிட்ச் ஆஃப்


சார்ஜ் செய்யும் போது தொலைபேசியை ஆஃப் செய்ய முடிந்தால் அதனை செய்துவிடுங்கள். ஏனெனில், இப்படிச் செய்வதால் பேட்டரி எந்தச் செயல்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாது. விரைவாக பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.


மொபைலைப் பயன்படுத்த வேண்டாம்


வேகமாக சார்ஜ் ஆக வேண்டிய சூழலில் சார்ஜில் இருக்கும் போனை நீங்கள் பயன்படுத்திக் கொண்டே இருந்தால் வேகமாக சார்ஜ் ஆகாது. முடிந்தளவுக்கு போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சார்ஜில் இருக்கும்போது போனை பயன்படுத்துவதும் தவறு. 


ஏரோபிளேன் மோட்


மொபைல் சார்ஜ் ஆகும்போது அவற்றில் இருக்கும் செயலிகள் வேகமாக சார்ஜ் பயன்பாட்டைக் குறைக்கும். அதற்காக நீங்கள் போனை ஏரோபிளேன் மோடில் போட்டுவைத்துவிட்டால் இன்னும் சிறப்பு. சார்ஜ் விரைவாக ஆகும். 


பவர் பேங்க் சிறந்தது


நீங்கள் எங்காவது அவசரநிலையில் இருந்தால், தொலைபேசியை சார்ஜ் செய்ய உங்களுக்கு நேரம் இல்லை என்றால், அத்தகைய நேரங்களில் பவர் பேங்க் உங்களை காப்பாற்றும். இருப்பினும், பவர் பேங்கையும் முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Vivo T1x Launched: விவோவின் பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ