அச்சத்தில் Google! வருகிறது சர்வ வல்லமை பொருந்திய ChatGPT!
Google Vs Chat GPT: எந்த விதமான தகவலையும் பெறவும் நாம் Google Search-ஐ நாடும் நிலையில், அதை விச சர்வ வல்லமை கொண்ட தொழில்நுட்பம் வவரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
AI கருவி: நம்மில் Google ஐ பயன்படுத்தாதவர்ஜ்கள் யாரும் இருக்க முடியாது. தினமும் Google தேடலில் எதையாவது தேடிக் கொண்டே இருக்கிறோம். உங்களுக்குத் தேவையான தகவலைத் தெரிவிப்பதற்கு இது வேலை செய்கிறது. சில வினாடிகளில் தகவல்களை அள்ளித் தருகிறது கூகுள். மக்கள் இப்போது அதை பழைய தொழில்நுட்பம் என்று அழைக்கும் காலம் வரலாம். இதற்குப் பின்னால் உள்ள காரணமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. உண்மையில், ChatGPT என்ற மென்பொருளின் விவாதம் சந்தையில் தீவிரமடைந்துள்ளது. கூகிளை விட இது சிறப்பாக செயல்படுவதாக நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் இந்த புதிய மென்பொருளால், கூகிள் மீது ஆபத்து மேகங்கள் சூழ்ந்துள்ளன என்று கூறுகிறார்கள். இந்த மென்பொருள் AI என்னும் செயற்கை நுண்ணறிவில் வேலை செய்கிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது.
ChatGPT என்றால் என்ன
ChatGPT என்பது ஜெனரேட்டிவ் ப்ரீ ட்ரெயின் மென்பொருளைக் குறிக்கிறது, இது AI மென்பொருள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. இதில் புதிதாக என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். இந்த மென்பொருள் உங்கள் கேள்விகளுக்கு மனிதனைப் போல சிந்தனையுடன் பதிலளிக்கிறது. நீங்கள் இயந்திரத்தனமான பதிலைப் பெறுகிறீர்கள் என்று நீங்கள் உணர மாட்டீர்கள். இந்த பதில் ஒரு மனிதன் கூறுவது போலவே இருக்கும். இந்த மென்பொருளின் மீதான விவாதம் சந்தையில் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதற்கு இதுவே காரணம். ChatGPT ஐ கூகுளுக்கு அச்சுறுத்தல் என்று நிபுணர்கள் அழைக்கிறார்கள். தொடர்ந்து வரும் மக்களின் கருத்துக்களைப் பார்க்கும்போது, கூகுளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னேறும் என்று நம்பப்படுகிறது. இந்த மென்பொருளின் அம்சங்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இதன் காரணமாக இது கூகிள் தேடலை விட முன்னேற முடியும்.
மனிதனைப் போல சிந்தித்து பதில் சொல்லும்
Chat GPT ஆனது பயனர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும். ஆனால் அது இயந்திரத்தனமான பதில் அல்ல. ஆனால் பிழைக்கான வாய்ப்பு இல்லாத மனிதனைப் போன்று சிந்தித்து கூறும் பதிலைப் போன்றது. பொதுவாக, கூகுளில் தேடும்போது, பல பதில்கள் கிடைக்கும், அவற்றில் சில உங்களுக்குப் பயன்படும், சில பயனற்றவை. இருப்பினும், இந்த புதிய கருவியால் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாது.
மேலும் படிக்க | ரூ.5000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்
மென்பொருள் சில வேலைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்
இந்த மென்பொருள் சில வேலைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். உண்மையில், இந்த மென்பொருள் மனித மொழியைப் புரிந்துகொண்டு மனிதனைப் போலவே பதிலளிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், கால் சென்டர் வேலைகள் செய்பவர்கள் மற்றும் உள்ளடக்க எழுதுபவர்களின் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
கேள்விகளுக்கு விரைவாக பதில் அளிக்கும்
ChatGPT உங்கள் கேள்விகளுக்கு மிக வேகமாக பதிலளிக்கிறது. எதிர்காலத்தில் அதை உங்கள் ஸ்மார்ட்போனிலும் பார்க்கலாம். இது ஒரு சிறந்த கருவி என்றும், இந்த காரணத்திற்காக கூகுள் பயன்பாடு குறையாலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Flipkart Big Saving Days: வெறும் 7999 ரூபாய்க்கு அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வாங்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ