இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஐடி விதிகள் 2021 இன் படி, செப்டம்பர் 2022க்கான எங்கள் அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 26 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸ்களை தடை செய்துள்ளோம். ஸ்பேம், கொள்கை மீறல் மற்றும் பிற காரணங்களுக்காக நாட்டில் சுமார் 26.85 லட்சம் அக்கவுண்ட்ஸ்களை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 8.72 லட்சம் அக்கவுண்ட்ஸ்கள் யூஸர்களால் Flagged செய்வதற்கு (எந்த புகாரும் வருவதற்கு முன்பே) முன்கூட்டியே தடை செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆகஸ்ட் மாதம் தடை செய்யப்பட்ட அக்கவுண்ட்ஸ்களை விட செப்டம்பர் மாதத்தில் வாட்ஸ்அப் தடை செய்த அக்கவுண்ட்ஸ்களின் எண்ணிக்கை 15% அதிகமாகும். தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் விதி 4(1)(d) இன் கீழ் 26.85 லட்சம் வாட்ஸ்அப் அக்கவுண்ட்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளன இதற்கிடையே செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட இந்த அக்கவுண்ட்ஸ்களின் எண்ணிக்கை, கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 3 லட்சம் அதிகம் ஆகும். வாட்ஸ்அப்பின் புகார் வழிமுறைகள் (grievance mechanism) மூலம் இந்திய யூஸர்களிடமிருந்து புகார் அறிக்கைகளை பெற்ற பிறகு பெரும்பாலான அக்கவுண்ட்ஸ்களை நாங்கள் தடை செய்துள்ளோம்.


மேலும் படிக்க | சைபர் தாக்குதலை தவிர்க்க உடனே இதை செய்யுங்கள்: வல்லுநர்கள் எச்சரிக்கை!!


தீவிர புகார்களையடுத்து சுமார் 23 அக்கவுண்ட்ஸ்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மொத்தத்தில் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரைவிலான காலகட்டத்தில் 26,85,000 இந்திய அக்கவுண்ட்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளன. யூஸர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு நிறுவனம் முன்னுரிமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதன் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் சிஸ்டம் துஷ்பிரயோகத்தைத் தடுக்கவும் எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்டது


இதுபோன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் சாஃப்ட்வேர் என்ஜினியர்ஸ், டேட்டா சயின்டிஸ்ட்ஸ், ரிசர்ச்சர்ஸ், சட்ட அமலாக்கம், ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு வல்லுநர்கள் அடங்கிய பிரத்யேக குழுவும் யூஸர்களின் பாதுகாப்பை தொடர்ந்து மானிட்டர் செய்துவருகிறது.


ஸ்பேம் மெசேஜ்களை அனுப்புவது குறித்த புகார்கள் அல்லது நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளை மீறுவதாக கண்டறியப்பட்டால், அந்த யூஸர்களின் அக்கவுண்ட்ஸ்களுக்கு வாட்ஸ்அப் தடை விதிக்கிறது. எனவே தெரியாத நபர்களுக்கு ஸ்பேம் மெசேஜ் அல்லது நார்மல் மெசேஜ் அனுப்புவதை தவிர்க்க எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ